நடிகர் சிவாவின் நடிப்பில் வெளியானது பறந்து போ படத்தின் டீசர்!

Paranthu Po Teaser: இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் பறந்து போ. ஒரு சுட்டியான பையனின் அப்பாவாக நடிகர் சிவா நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் வெளியான கும்பளங்கி நைட்ஸ் படத்தின் மூலம் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவாவின் நடிப்பில் வெளியானது பறந்து போ படத்தின் டீசர்!

பறந்து போ படத்தின் டீசர்

Published: 

04 Jun 2025 19:28 PM

நடிகர் சிவாவின் (Actor Shiva) நடிப்பில் உருவாகியுள்ள படம் பறந்து போ. இந்தப் படத்தை இயக்குநர் ராம் இயக்கி உள்ளார். நடிகர் சிவா உடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ், தியா, ஜெஸ்ஸி குக்கு, பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. காரணம் முன்னதாக இயக்குநர் ராம் இயக்கத்தில் அப்பா மகள் செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான தங்க மீன்கள் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே போல அப்பா மகன் செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியாக உள்ள இந்தப் படமும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள நிலையில் பாடல்கள் அனைத்தையும் மதன் கார்க்கி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்‌ஷன், செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

ஆல் அப்பாஸ் ஆர் லையர்ஸ்:

இந்த நிலையில் படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மகனை கண்டிக்கும் அப்பா. அப்பாவிற்கு பாடத்தைக் கற்றுக்கொடுக்கும் மகன் என்று படத்தை மிகவும் கலகலப்பாக எடுத்துள்ளார். ஒரு காட்சியில் அப்பா சத்தியம் செய்கிறேன் என்ன நம்பு என்று சொன்னால், உன் சத்தியத்தை எல்லாம் நம்ப முடியாது நீ அம்மாவ சத்தியம் பன்ன சொல்லு என்று இந்த உலகத்தில் உள்ள ஆல் அப்பாஸ் ஆர் லையர்ஸ் என்று அந்த டீசர் முடிகிறது.

நடிகர் சிவா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

மேலும் படம் முன்னதாக ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தை திரையரங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன்படி படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். மேலும் நடிகர் சிவா நடிப்பில் முன்னதாக வெளியான படங்கள் கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் தற்போது இந்தப் படத்தில் வித்யாசமான கதைக்களத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.