பிக்பாஸில் வைல்கார்ட் போட்டியாளராக நுழையும் பிரபல சீரியல் நடிகர் – வைரலாகும் தகவல்

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் நிச்சயமாக பிக்பாஸில் இந்த வாரம் வைல்ட்கார்ட் என்ட்ரி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் வைல்கார்ட் போட்டியாளராக நுழையும் பிரபல சீரியல் நடிகர் - வைரலாகும் தகவல்

பிக்பாஸ்

Published: 

25 Oct 2025 10:43 AM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில் மொத்தம் 20 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பொதுவாக முன்பு உள்ள சீசன்களில் எல்லாம் மொத்தம் 15 அல்லது 16 போட்டியாளர்கள் மட்டுமே முதலில் பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே அனுப்பப்படுவார்கள். அதனைத் தொடர்ந்து வைல்கார்ட் போட்டியாளர்கள் என 2 பேர் உள்ளே அனுப்பப்படுவார்கள். இதன் காரணமாக பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரம் எவிக்‌ஷன் இருக்காது. இரண்டாவது வாரத்தில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் எவிக்‌ஷன் ப்ராசஸ் நடைபெறும். ஆனால் கடந்த இரண்டு சீசன்களாக பிக்பாஸ் வீட்டில் 18ற்கும் அதிகமான போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்படுகின்றனர்.

இதன் காரணமாக முதல் வாரத்தில் இருந்தே தற்போது எவிக்‌ஷன் ப்ராசஸ் நடைபெறுகின்றது. இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் அனுப்பப்பட்ட நிலையில் முதல் வாரத்தில் இருந்தே எவிக்‌ஷன் ப்ராசஸ் நடைபெறுகின்றது. அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சியில் முதல் வாரம் முடிவதற்கு முன்பே நந்தினி வீட்டைவிட்டு வெளியேறுவதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்து அந்த வார எவிக்‌ஷன் ப்ராசசில் இருந்த பிரவீன் காந்தி முதல் வாரம் எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 வீட்டில் இருந்து அப்சரா குறைவான வாக்குகள் பெற்றதால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இப்படி இருக்கும் சூழலில் இந்த 3-வது வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என்று தகவல்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது.

Also Read… என்னுடைய படைப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதில் ஒரு சிறிய வருத்தம் இருக்கிறது – விஷ்ணு விஷால்

பிக்பாஸில் நுழையும் பிரபல சீரியல் நடிகர் சிப்பு சூர்யன்:

அதன்படி இந்த மூன்றாவது வார இறுதியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் இருக்கும் என்று முன்னதாகவே நிகழ்ச்சி குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த நிலையில் வைல்ட்கார்ட் போட்டியாளர்களாக பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் யார் வருவார்கள் என்று பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி சன் டிவியில் ரோஜா என்ற சீரியல் மூலம் பிரபலமான சீரியல் நடிகர் சிப்பு சூர்யன் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் போட்டியாளராக உள்ளே நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? ஜிவி பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்

Related Stories
Sirai Movie: மிகவும் உண்மையானதாகவும் அசலாகவும் உணர்ந்தேன்.. சிறை படத்திற்கு விமர்சனம் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து!
அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் ரீ-ரிலீஸாகும் மங்காத்தா.. வைரலாகும் பதிவு!
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான டொவினோ தாமஸின் நரிவேட்டை படம் – எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
2026ல் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக காத்திருக்கும் தமிழ் நடிகர்களின் படங்கள்?
2025-ம் ஆண்டில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த தென்னிந்திய மொழிப் படங்கள்
Radhika Apte: ஷூட்டிங் தளத்தில் நான் மட்டும்தான் பெண்.. என்னிடம் அதை செய்த சொன்னது மிகவும் அசௌகரியமாக இருந்தது- ராதிகா ஆப்தே ஓபன் டாக்!
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்
வருடத்திற்கு 6 முதல் 12 லட்சம் சம்பளம் வாங்குகிறீர்களா?
ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் தகுதிப்பெற்ற இந்தியத் திரைப்படம்!!
உலக அளவில் 100 சிறந்த இனிப்புகளில் இடம்பெற்ற 2 இந்திய இனிப்புகள் - எது தெரியுமா?