Sai Pallavi: ‘எனக்கு சினிமாவில் அவரின் டான்ஸ் ரொம்பவே பிடிக்கும்’- சாய் பல்லவி சொன்ன நடிகர் யார் தெரியுமா?

Sai Pallavi Favorite Actor And Dancer: பான் இந்திய சினிமா வரை பிரபலமான நாயகியாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் தனக்கு பிடித்த நடிகர் மற்றும் தமிழில் தனக்கு பிடித்த சிறந்த டான்சர் யார் என்பது குறித்து தெரிவித்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

Sai Pallavi: எனக்கு சினிமாவில் அவரின் டான்ஸ் ரொம்பவே பிடிக்கும்- சாய் பல்லவி சொன்ன நடிகர் யார் தெரியுமா?

சாய் பல்லவி

Published: 

07 Feb 2026 08:32 AM

 IST

நடிகை சாய் பல்லவி (Sai pallavi) கடந்த 2015ம் ஆண்டில் வெளியான பிரேமம் (Premam) என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக நுழைந்தார். இப்படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு (Nivin Pauly) ஜோடியாக நடித்த்து ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்தார். ஆனால் இவர் இதற்கு முன்னே தமிழில் ரவி மோகனின் (Ravi Mohan) “தாம் தூம்” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறு வேடத்தில் நடித்துள்ளார். இதுவே இவருக்கு சினிமாவில் முதல் படமாகும். இந்த படத்தை பின்னரே மலையாளத்தில் ப்ரேமம் படத்தின் மூலமாக லீட் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த விதத்தில் கதாநாயகியாக தனது முதல் தமிழ் படத்தையே தனுஷுடன் இனைந்து நடித்திருந்தார். இதை தொடர்ந்து தெலுங்கு மொழியிலும் சாய் பல்லவி நடித்திருக்கும் நிலையில், தற்போது இந்தியில் ஏக் தின் (EK Din) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இதைத் தொடர்ந்து ராமாயணம் (Ramayana) என்ற படத்தில் ரன்பீர் கபூருக்கு (Ranbir Kapoor) ஜோடியாக சீதை வேடத்தில் நடித்துவருகிறார்.

இப்படம் 2 பாகங்களாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய சாய் பல்லவி, தனக்கு பிடித்த நடிகர் மற்றும் சினிமாவில் சிறந்த டான்சர் யார் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அந்த நடிகர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: என்னால் விஜயை பிரித்து பார்க்க முடியாது – நடிகர் சிலம்பரசன்

சாய் பல்லவிக்கு பிடித்த தமிழ் சினிமாவில் சிறப்பாக டான்ஸ் ஆடும் நடிகர் யார்:

அந்த நேர்காணலில் நடிகை சாய் பல்லவியிடம் பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதில் தொகுப்பாளர் அவரிடம் முதலில், உங்களுக்கு பிடித்த நடிகர் யார்” என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, “இப்படி உடனே கேட்டால் நான் யாரை சொல்வேன், எனக்கு ஹீரோ என்றாலே முதலில் நினைவிற்கு வருபவர் சூர்யா சார்தான்”. மேலும் தொகுப்பாளர் அவரிடம் “சினிமாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த டான்சர் யார்?” என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சாய் பல்லவி, “டான்ஸ் என்றாலே தளபதி விஜய் சார்தான்” என நெகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.

நடிகை சாய் பல்லவி தனது புது படம் குறித்து வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகை சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். இந்தியில் ஏக் தின் என்ற படத்தில் நடித்துள்ள நிலையில், 2026 மே மாதத்தில் வெளியாகிறது. இடத்தி தொடர்ந்து ராமாயணம் படத்தில் சீதையாக நடித்துள்ளார். இப்படம் 2026 தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. மேலும் இவர் தமிழில் தனுஷின்டி55 படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இவர் மாரி 2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்த நிலையில், இதையடுத்து 2வது முறையாக இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: எனது படங்கள் எல்லாம் புதுமுக இயக்குநர்களோட.. தோல்வியடைந்த இயக்குநர்களுடன்தான் – சசிகுமார் பேச்சு!

அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு சினிமாவில் மவுசு ஏறிய நிலையில், தற்போது தெலுங்கில் மிக பிரம்மாண்ட படமான கல்கி2898ஏடி பார்ட் 2 படத்தில் நடிக்கவுள்ளார். இதில் நடிகை தீபிகா படுகோன் நடித்த “SUM80” (சுமதி) என்ற வேடத்தில் சாய் பல்லவி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிரஞ்சீவி - மோகன்லாலின் மெகா கூட்டணி இணையும் படம் - வெளியான அப்டேட்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 64 - தயாரிப்பாளர் இவரா?
இரு விமானங்களில் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு
4 கி.மீ கடலில் நீந்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்