Suriya 45: சூர்யா 45 படத்தின் டீசர்.. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கொடுத்த மாஸ் அப்டேட்!

Suriya 45 Title Teaser Update : இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் முன்னணி இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சூர்யா45. இப்படத்தில் நடிகர் சூரியா மற்றும் திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் டீசர் குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அப்டேட் கொடுத்துள்ளார்.

Suriya 45: சூர்யா 45 படத்தின் டீசர்.. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கொடுத்த மாஸ் அப்டேட்!

சூர்யா 45 திரைப்படம்

Updated On: 

13 Jun 2025 09:36 AM

தமிழ் சினிமாவில் துணை நடிகராக நுழைந்து, தற்போது பிரம்மாண்ட படத்தின் இயக்குநராக இருந்து வருபவர் ஆர்.ஜே. பாலாஜி (RJ Balaji). இவரின் நடிப்பில் இறுதியாகச் சொர்க்கவாசல் (Sorgavaasal) என்ற திரைப்படம் வெளியானது. இப்படமானது கலவையான விமர்சனங்களைப் பெற்று வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பிரம்மாண்ட படமான சூர்யா45 (Suriya45) படத்தை இயக்குவதில் இணைந்தார். நடிகர் சூர்யாவின் (Suriya) முன்னணி நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தை டீரீம்ஸ் வாரியர் பிக்ச்சர்ஸ்  (Dreams Warrior Pictures) நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhayankkar) இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் அதில் சூர்யா45 படத்தின் டீசர் குறித்த தகவலைக் கூறியிருக்கிறார். அதில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், “சூர்யா 45 படத்தின் டீசர் விரைவில் ” அப்டேட் கொடுத்திருக்கிறார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

சூர்யா 45 திரைப்படம் :

ரெட்ரோ படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து நடிகர் சூர்யா இணைந்து நடித்துவந்த படம் சூர்யா45. இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். சூர்யாவின் இந்த திரைப்படமானது ஒரு குற்றம் சார்ந்த கிராமத்துக் கதைக்களத்துடன் கூடிய படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கை நடிகர் சூர்யா முழுமையாக நிறைவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்துதான் சூர்யா, தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா46 படத்தில் இணைந்துள்ளார்.

நடிகர் சூர்யாவின்45 திரைப்படத்தின் டைட்டில் டீசர் குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகவுள்ளதாம். இது குறித்த அப்டேட்டுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்தின் டைட்டில் டீசர் டிராக் பாடலினை முடித்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த 2025, ஜூன் மாதத்திற்குள் சூர்யா45 படத்திலிருந்து சிறப்பான அத்தகவல் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தை படக்குழு இந்த 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா 46 படம் :

சூர்யா45 படத்தை தொடர்ந்து, தெலுங்கு இயக்குநருடன் நடிகர் சூர்யா இணைந்துள்ள திரைப்படம் சூர்யா46. இப்படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, ஜூன் 9ம் தேதி முதல் ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார். உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையானது உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
இன்ஸ்டாவில் 8.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் ஃபாலோ செய்யும் ஒரே ஒரு நபர் – யார் தெரியுமா
Madharaasi : சாய் அபயங்கரின் குரலில்.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலிருந்து ‘சலம்பல’ என்ற பாடல் வெளியானது!
Vijay Deverakonda Speech : ‘உங்கள் அன்பினால் இந்த வெற்றி’ – கிங்டம் பட வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
Karthi : ‘சர்தார் 2’ படக்குழுவிற்கு ஸ்பெஷல் விருந்து வைத்த கார்த்தி.. வைரலாகும் வீடியோ!
நடிகர் நானியின் நடிப்பில் வெளியான ஜெர்சி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
தெறி படத்தின் ஷூட்டிங்கில் நைனிகா நடிப்பைப் பார்த்து விஜய் அசந்துட்டார் – நடிகை மீனா!