வலிமைக்கு அப்பறம் என்னோட கருப்பு அப்டேட்டிற்காகதான் ரசிகர்கள் அதிகம் காத்திருந்தனர் – ஆர்.ஜே.பாலாஜியின் கலகல பேச்சு!
RJ Balaji talks about Karuppu movie updates: தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. இவரது இயக்கத்தில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படம் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தது குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசியது வைரலாகி வருகின்றது.

ஆர்.ஜே.பாலாஜி
மக்களிடையே இணையதள பயன்பாடு அதிகரித்த பிறகு சினிமா தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் முன்பு எல்லாம் படம் தொடர்பான அப்டேட்கள் இவ்வளவு இருக்காது. ஆனால் இணையதள பயன்பாடு அதிகரித்த பிறகு ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் ரிலீஸ், டீசர், ட்ரெய்லர் என பல அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்து ஷூட்டிங் முடிவடையும் வரை தொடர்ந்து அப்டேட்கள் வெளியாவதன் காரணத்தால் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்து எளிமையாக தெரிந்துகொள்கின்றனர். இந்த நிலையில் இது ஒரு பக்கம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் படக்குழுவினருக்கு ஒரு பக்கம் அழுத்தமாகவே உள்ளது. இது குறித்து பலரும் தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர்.
அதன்படி தமிழ் சினிமாவில் இந்த அழுத்தத்தை அதிகம் எதிர்கொண்டது நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை படம் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவான இந்தப் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் படம் தொடர்பான அப்டேட்களும் வெளியாகாமல் இருந்ததால் படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். இது சினிமா வட்டாரங்களில் அதிக அளவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
வலிமை உடன் கருப்பு படத்தை ஒப்பிட்டு பேசிய ஆர்.ஜே.பாலாஜி:
இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரின் வலிமை படத்தைப் போல நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் அப்டேட்டையும் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில் வர்ணனையாளராக ஆர்.ஜே.பாலாஜி இருக்கிறார். நேற்று நடைப்பெற்ற கிரிக்கெட் மேட்சில் வர்ணனையின் போது பேசிய ஆர்.ஜே.பாலாஜி வலிமை படத்திற்கு பிறகு எனது கருப்பு படத்தின் அப்டேட்டைதான் அதிகம் கேட்டார்கள். ஒருவழியா ரிலீஸ் தேதிய சொல்லியாச்சு என்று கலகலப்பாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு:
#Valimai update-ku apram romba naal wait pannitu irundheenga… 😄
Aana ippo varra ella update-um en padam update dhaan pa! 🔥Yappah… update kuduthutom-nu sollunga! 🙌”
– #RjBalaji 🎙️ #MIvKKR#Karuppu pic.twitter.com/THwIiHNSLi
— Movie Tamil (@_MovieTamil) March 29, 2026
Also Read… Jailer 2: ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் முடிந்ததா? – வைரலாகும் தகவல்!