கருப்பு படத்தின் சென்சார் இப்படிதான் அமைந்தது – ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்

RJ Balaji about Karuppu Censor: தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள பெரிய படம் என்றால் அது கருப்பு தான். இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

கருப்பு படத்தின் சென்சார் இப்படிதான் அமைந்தது - ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்

கருப்பு

Published: 

01 May 2026 13:50 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரமாண்டமாக உருவாகி தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கும் படம் கருப்பு. நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் கருப்பு. இந்த கருப்பு படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். முதன்முறையாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்காமல் மற்றொரு நாயகனை வைத்து இயக்கிய படம் கருப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா சரவணன் என்ற கதாபபாத்திரத்தில் நடித்து உள்ள நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் பிரீத்தி என்ற கதாபபத்திரத்தில் நடித்து உள்ளார். இவர்கள் இருவருமே இந்தப் படத்தில் வழக்கறிஞர்களாக நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

அதன்படி நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, இந்திரன், நட்டி சுப்பிரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, யோகி பாபு, மன்சூர் அலி கான், ஜாபர் சாதிக் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து உள்ள நிலையில் படம் வருகின்ற 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கருப்பு படத்தின் சென்சார் இப்படிதான் அமைந்தது:

இந்த நிலையில் கருப்பு படத்தின் சென்சார் குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது மற்ற படங்களைப் போலவே எங்களுக்கும் பொதுவான வெட்டுக்களும் ஒலியிழப்புகளும் கிடைத்தன. ஆனால் இந்தப் படத்தின் கருப்பொருள் வலுவானது. பொதுவாக, படத் தணிக்கையைப் பார்த்தவர்கள் மகிழ்ச்சியாக இருந்ததை நான் கண்டேன். அவர்கள், எங்களுக்குப் படம் பிடித்திருந்தது நாங்கள் படத்தை ரசித்தோம், ஆனால் எங்கள் உத்தரவின்படி என்று கூறினார்கள். படத்தில் நான் மிகவும் கவனமாகச் செய்த சில விஷயங்களை மாற்றுமாறு அவர்கள் என்னிடம் கேட்டார்கள். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, நான் விரும்பியதைப் பெறுவதற்காக அவர்களுடன் போராட முயன்றேன். மாற்ற வேண்டிய சில சிறிய விஷயங்கள் இருந்தன. ஆனால் ஒட்டுமொத்தமாக, அது ஒரு நியாயமான தணிக்கையாக இருந்தது. அவர்கள் கருப்பொருளைப் புரிந்துகொண்டார்கள். படத்தில் இருந்த சாராம்சத்தை அவர்கள் பாராட்டினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… மின்னல் முரளி 2 எடுப்பது குறித்து இப்போதைக்கு ஐடியா இல்லை – பேசில் ஜோசப்

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:

Also Read… Sivakarthikeyan: அமரன் பட கிளைமேக்ஸை என் மனைவி பார்க்கவில்லை.. எனது மகள் கட்டியணைத்து அழுதார் – சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

Follow Us
Related Stories
வண்டார்கொடி என் வண்ணக்கிளி என் உள்ளாரா உன்னால காயம் – சூர்யாவின் நடிப்பில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ரெட்ரோ ஒரு ஆண்டு நிறைவடைந்தது
ரியோ ராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் டைட்டில் இதுவா? – அறிவிப்பு வீடியோ இதோ!
ராம் சரணின் பெத்தி படத்தின் ரிலீஸ் எப்போது? இன்று மாலை வெளியாகும் அதிகாரப்பூர்வ அப்டேட்
சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு படம் என்ன ஆனது? தயாரிப்பாளர் சொன்ன சுவாரஸ்ய விசயம்
18 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள மம்முட்டி – மோகன்லால்… எப்படி இருக்கு பேட்ரியாட் படம்? எக்ஸ் விமர்சனம் இதோ!
நடிகர் அபிஷன் ஜீவிந்த் உடன் நடிக்கும் பிரபல கன்னட நடிகர்? வைரலாகும் தகவல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..