பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ரியல் ஜோடி பிரஜின் மற்றும் சாண்ட்ரா – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இன்று வைல்ட் கார்ட் போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் 4 நுழைந்துள்ளது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ரியல் ஜோடி பிரஜின் மற்றும் சாண்ட்ரா - வைரலாகும் வீடியோ

பிரஜின் மற்றும் சாண்ட்ரா

Published: 

28 Oct 2025 21:27 PM

 IST

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி தொடர்ந்து 8 சீசன்கள் தமிழில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது 9-வது சீசன் தொடங்கி 22 நாட்களைக் கடந்துள்ளது. முன்னதாக தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை 7 சீசன்களாக நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் 7-வது சீசனில் பல நெகட்டிவான விமசனங்களைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன் 8-வது சீசனை தான் தொகுத்து வழங்கவில்லை என்றும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருவதால் இதனை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவரைத் தொடர்ந்து நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதாக அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த 8-வது சீசனில் இருந்து விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதன்படி விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக கடந்த வார எபிசோட் விஜய் சேதுபதியின் அதிரடியான பேச்சு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ள ரியல் ஜோடி:

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காதலில் விழுந்து ரியல் ஜோடிகளாக மற்ற மொழிகளில் உள்ள போட்டியாளர்கள் மாறியது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழில் நிறைய போட்டியாளர்கள் போட்டியில் இருக்கும் போது காதல் செய்வார்கள். அதனைத் தொடர்ந்து வெளியே வந்ததும் அவர்களின் காதல் நீடித்ததா என்று கேட்டால் அது நிச்சயமாக நீடிக்கவில்லை.

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் ரியல் ஜோடிகளான பிரஜின் மற்றும் சாண்ட்ரா வைல்ட்கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இவர்களின் ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்களை பிக்பாஸில் பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Also Read… பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் போட்டியாளராக நுழைந்த திவ்யா கணேஷ் – வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 9 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் காஸ்மோரா படம் – கொண்டாடும் படக்குழு