ரவி மோகன் நடிக்கும் படத்திற்கு இனி ‘ப்ரோ கோட்’ என்று பெயரிடப்படாது!

Actor Ravi Mohans Bro Code Movie Name Changed: நடிகர்கள் ரவி மோகன், எஸ்ஜே சூர்யா மற்றும் அர்ஜுன் அசோன் இணைந்து நடிக்கும் படத்திற்கு ப்ரோ கோட் என்று முன்னதாக பெயர் வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த பெயரை நீக்கியுள்ளது படக்குழு.

ரவி மோகன் நடிக்கும் படத்திற்கு இனி ப்ரோ கோட் என்று பெயரிடப்படாது!

ரவி மோகன். எஸ்ஜே சூர்யா மற்றும் அர்ஜுன் அசோகன்

Published: 

11 Mar 2026 15:06 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் கடந்த 2025-ம் ஆண்டில் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அந்த நிறுவனத்திற்கு ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்று பெயர் வைக்கப்பட்ட நிலையில் அந்த நிறுவனத்தின் கீழ் தற்போது படங்களை தயாரித்தும் வருகிறார். அப்படி ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பாக முதலாவதாக தயாரிக்கப்படும் படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர்கள் ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் அர்ஜுன் அசோகன் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் உபேந்திரா, கௌரி பிரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஐஸ்வர்யா ராஜ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு முன்னதாக ப்ரோ கோட் என்று பெயரிடப்பட்டு டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசர் வெளியான போது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் டைட்டில் படு வைரலான நிலையில் பிரபல மதுபான நிறுவனம் தங்களது நிறுவனத்தின் பெயரான ப்ரோ கோட் என்ற பெயரை படத்திற்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த நிலையில் படத்தின் பெயருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது.

ப்ரோ கோட் என்ற படத்தின் பெயரை நீக்கியது ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனம்:

நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமும், இந்தோஸ்பிரிட் பீவரேஜஸ் பிரைவேட் லிமிடெட்டும், படம் தங்கள் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையைப் பயன்படுத்துவதாக வாதிட்டதை அடுத்து, தலைப்பைப் பயன்படுத்துவது தொடர்பான வர்த்தக முத்திரை தகராறை தீர்த்து வைத்ததாகக் கூறப்படுகிறது. டெல்லி உயர் நீதிமன்ற மத்தியஸ்தம் மற்றும் சமரச மையத்தின் கீழ் இரு தரப்பினரும் மத்தியஸ்தத்தில் பங்கேற்ற பிறகு, டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு சமரசத்தைப் பதிவு செய்ததாகக் தகவல்கள் தெரிவிக்கின்றது.

படத்தின் விளம்பரப் பொருட்கள் மற்றும் ஆன்லைன் உள்ளடக்கத்திலிருந்தும் தலைப்பு நீக்கப்படும். கடந்த ஆண்டு அக்டோபரில், தயாரிப்பாளர்கள் சரியான தலைப்பையோ அல்லது ஏமாற்றும் வகையில் ஒத்த தலைப்பையோ பயன்படுத்துவதைத் தடுக்கும் விளம்பர இடைக்காலத் தடையை நீதிமன்றம் வழங்கியது. கூடுதலாக, நடிகர் ரவி மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பு தொடங்கிய வழக்குகளையும் திரும்பப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி… தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ் குமார்?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Kara Movie: தனுஷின் ‘கர’ திரைப்படத்தின் கதை இதுவா? இணையத்தில் கசிந்த தகவல்!

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..