Karathey Babu: ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ பட ஷூட்டிங் நிறைவு.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

Karathey Babu Movie Shooting Wrapped: தமிழ் சினிமாவில் நடிகராக நுழைந்து தற்போது இயக்குநராகவும் படத்தை இயக்கிவருபவர் ரவி மோகன். இவர் டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடித்துவந்த படம் கராத்தே பாபு. அரசியல் கதைக்களத்தில் உருவான இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

Karathey Babu: ரவி மோகனின் கராத்தே பாபு பட ஷூட்டிங் நிறைவு.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

கரத்தே பாபு படப்பிடிப்பு நிறைவு

Updated On: 

05 Feb 2026 14:44 PM

 IST

நடிகர் ரவி மோகனின் (Ravi Mohan) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). இப்படத்தில் நடிகர் ரவி மோகன் நெகடிவ் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவந்த நிலையில், வில்லனாக இவர் நடித்த பராசக்தி படமானது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படமானது கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படத்தை அடுத்ததாக ரவி மோகன் அரசியல் கதைக்களத்தில் நடித்துவந்த படம்தான் கராத்தே பாபு (Karathey Babu). இதை இயக்குநர் கணேஷ் கே பாபு (ganesh K Babu) இயக்கியுள்ளார். இவர் கவினின் (Kavin) டாடா (DADA) படத்தின் இயக்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் முற்றிலும் அரசியல், ஊழல் மற்றும் அதிரடி சண்டைகள் என மாறுபட்ட கதைகளத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இடைப்பட்ட மாதத்தில் தொடங்கிய நிலையில், இன்று 2026 பிப்ரவரி 5ம் தேதியில் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: வெற்றிமாறன் கதை சொல்லும்விதம் வித்யாசமானது – நடிகர் சிலம்பரசன் ஓபன் டாக்

கராத்தே பாபு படக்குழு வெளியிட்ட ஷூட்டிங் நிறைவு குறித்த பதிவு:

கராத்தே பாபு படத்தின் ரிலீஸ் எப்போது :

இந்த கராத்தே பாபு படத்தில் நடிகர் ரவி மோகன் எம்.எல்.ஏ ஷண்முக பாபு வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை டவுடி ஜிவால் நடித்திருக்கிறார். இவர் இப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக தொடங்கியுள்ளது. இப்படமானது அரசியல் கதையில் உருவாகியுள்ள நிலையில், ரவி மோகனின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அனிமல் பார்க் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் – இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஓபன் டாக்

இப்படத்தை ஸ்க்ரீன் சீன் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துவருகிறார். இந்த படமானது எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், இப்படம் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிடப்படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். அதன்படி வரும் 2026 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் படம் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் இப்படத்திலிருந்து தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பவரின் வாழ்க்கைக்கே மதிப்பு இல்லை’.. தொழிலதிபர் வேதனை!!
‘மார்கோ’ பட இயக்குநருடன் பெரும் பட்ஜெட் படத்தில் நடிக்க தயாராகும் பாலகிருஷ்ணா!
புகழ்பெற்ற தெலுங்கு இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி..
உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்