Ravi Mohan : காரைக்குடி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ரவி மோகன் – கெனிஷா!

Ravi Mohan And Keneeshaa : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் ரவி மோகன். இவரின் விவாகரத்து தொடர்பான செய்திகள் சமீப காலமாக இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இவர் அவரின் தோழி கெனிஷா பிரான்சிஸுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இதை தொடர்ந்து அவர்கள் இருவரும், இன்று 2025, ஜூன் 4ம் தேதியில் காரைக்குடியில் உள்ள முருகன் கோவிலில் இணைந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

Ravi Mohan : காரைக்குடி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ரவி மோகன் - கெனிஷா!

ரவி மோகன், கெனிஷா

Published: 

04 Jun 2025 20:37 PM

 IST

நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாகக் காதலிக்க நேரமில்லை (Kadhalika Neramillai) என்ற படம் வெளியானது. இந்த படமானது எதிர்பார்த்த வரவேற்பை இவருக்குக் கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து கராத்தே பாபு (Karathye Babu), பராசக்தி (Parasakthi), ஜீனி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் முக்கிய நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று 2025, ஜூன் 4ம் தேதியில் காரைக்குடியில் (Karaikudi)  உள்ள பிரசித்தி பெற்ற முருகர் கோவிலில், தனது தோழியான பாடகி கெனிஷாவுடன்  (Singer Keneeshaa) இணைந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் கழுத்தில் மாலையுடன் இருக்கின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷின் மகள் திருமணத்தைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்றுவரும் நிலையில், இவர்கள் நிஜமாகவே நண்பர்களா என்று கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வருகிறது.

இணையத்தில் வைரலாகும் கெனிஷா மற்றும் ரவி மோகனின் புகைப்படம் :

ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவியின் விவாகரத்து பிரச்சனை :

நடிகர் ரவி மோகன் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக தனக்கு எந்தவித அறிவிப்பும் கொடுக்கவில்லை என்று ஆர்த்தி ரவி பதில் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து இவர்கள் இருவரின் மத்தியில் அறிக்கை வெளியிட்டு விவாகரத்து பிரச்னை இணையதளங்கள் மூலம் தீயாக பரவி வந்தது. மேலும் இவர்களின் விவாகரத்து பிரச்சனை சென்னை குடும்பநல நீதிமன்றத்திற்குச் சென்றது, மேலும் உயர்நீதிமன்றத்தில் இவர்கள் இருவரும் இனி இணையதளங்களில் அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்றும், இருக்கும் அறிக்கைகளை நீக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் இவர்களின் வழக்கை வரும் 2025, ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகன் தனது தோழி கெனிஷா பிரான்சிஸுடன், காரைக்குடியில் உள்ள முருகர் கோவிலில் இன்று 2025, ஜூன் 4ம் தேதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இன்னும் ரவி மோகனுக்கு விவாகரத்து கிடைக்காத நிலையில், தனது தோழியுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
வீக்கெண்டில் வீட்லேயே ஜாலியா ஒரு படம் பார்க்கனுமா? இந்த நெய்மர் படத்தை மிஸ் செய்யாமல் பாருங்க
Year Ender: 2025ல் ரூ 100 கோடிகள் வசூல் செய்த தமிழ் நடிகர்களின் படங்கள் என்னென்ன.. விவரமாக தெரிஞ்சிக்கோங்க!
2025-ம் ஆண்டில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களின் லிஸ்ட் இதோ
Sudha Kongara: சிவகார்த்திகேயன் அற்புதமான நடிகர்… பராசக்தி படத்திற்கு ஓகே சொன்னது இப்படித்தான்- சுதா கொங்கரா!
Suriya47: இந்தியாவில் முதல் முறை.. சூர்யா47ல் பயன்படுத்தப்படும் சிறப்பான தொழில்நுட்பம்? என்னனு தெரியுமா?
Sivakarthikeyan: பராசக்தி படம் வீரம், புரட்சி, காதலை பேசும்.. பொங்கலுக்கு நல்ல கொண்டாட்ட படமாக இருக்கும் – சிவகார்த்திகேயன் பேச்சு!
உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?