சந்தோஷ் சுப்ரமணியம் ஹிட் சீனை ரீ கிரியேட் செய்த ஜெனிலியா – ரவி மோகன்

Ravi Mohan and Genelia: நடிகர் ரவி மோகன் தற்போது நடிகராக மட்டும் இன்றி சினிமாவில் மற்றொரு அவதாரத்தை எடுத்துள்ளார். ஆம் அவர் தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த தொடக்க விழாவிற்கு பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு பேசினர். இந்த விழாவில் நடிகை ஜெனிலியாவும் கலந்துகொண்டார்.

சந்தோஷ் சுப்ரமணியம் ஹிட் சீனை ரீ கிரியேட் செய்த ஜெனிலியா - ரவி மோகன்

ஜெனியா - ரவி மோகன்

Updated On: 

28 Oct 2025 12:50 PM

 IST

இயக்குநர் மோகன் ராஜா (Director Mohan Raja) இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சந்தோஷ் சுப்ரமணியம். ரொமாண்டிக் காமெடி படமாக வெளியான சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஜெனிலியா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சந்தானம், பிரேம் ஜி. ஸ்ரீநாத், சத்யன், கீதா, கௌசல்யா, கிராத், எம்.எஸ்.பாஸ்கர், சடகோப்பன் ரமேஷ், விஜயகுமார், சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மாணிக்க விநாயகம், புஷ்பவனம் குப்புசாமி, ரவிராஜ், செவ்வாலை ராசு, அனு ஹாசன், நீலிமா ராணி, சத்திய கிருஷ்ணன், தேசிக ஸ்ரீ, ஷோபி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் திரையர்னக்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெனிலியா மற்றும் ரவி மோகனின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் வரும் பல காட்சிகளை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் ரீ கிரியேட் செய்தது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் சுப்ரமணியம் பட காட்சியை மீண்டும் ரீ கிரியேட் செய்த நடிகர்கள்:

இந்த நிலையில் இன்று ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் திறப்பு விழாவில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர். இதில் நடிகை ஜெனிலியா மற்றும் அவரது கணவர் இருவரும் கலந்துகொண்டு நடிகர் ரவி மோகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் நடிகர்கள் ரவி மோகன் மற்றும் ஜெனிலியா இருவரும் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் இருக்கும் சூப்பர் ஹிட் காட்சியை இருவரும் மேடையில் செய்துக் காட்டி அனைவரையும் சர்ப்ரைஸ் செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கு கிடைத்த புது விருது… மகிழ்ச்சியில் படக்குழு

இணையத்தில் வைரலாகும் ரவி மோகன் – ஜெனிலியா வீடியோ:

Also Read… ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் எனக்கு அந்தப் படம் மிகவும் பிடிக்கும் – சிவகார்த்திகேயன் எத சொல்லிருக்காரு தெரியுமா?

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை