Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ramkumar Balakrishnan : ‘அயோத்தி’ படத்திற்குத் தேசிய விருது கொடுக்கலாம் – பார்க்கிங் இயக்குநர் கருத்து!

Ramkumar Balakrishnan About Ayothi Movie : இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் இயக்கிய பார்க்கிங் படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்தது. இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகுமாரின் அயோத்தி படத்திற்கு தேசிய விருது கொடுக்கலாம் என தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Ramkumar Balakrishnan : ‘அயோத்தி’ படத்திற்குத் தேசிய விருது கொடுக்கலாம் – பார்க்கிங் இயக்குநர் கருத்து!
ராம்குமார் பாலகிருஷ்ணன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 10 Aug 2025 19:00 PM

கடந்த 2023ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் பார்க்கிங் (Parking). இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan) மற்றும் எம். எஸ் . பாஸ்கர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படமாகும் இந்த பார்க்கிங். இந்த படமானது 2023ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படம் என்ற தேசிய விருதை (National Film Award) பெற்றுள்ளது. இந்த படத்திற்கு கிட்டதட்ட 3 விருதுகள் கிடைத்திருந்தது. மேலும் இப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற விருதும் கிடைத்திருந்தது. இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த , இவரிடம் அயோத்தி (Ayothi) திரைப்படம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.

அயோத்தி படத்திற்கு தேசியவிருது கிடைத்திருக்கவேண்டும் என கருத்துக்கள் நிலவி வருகின்ற நிலையில், அதுகுறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், “எனக்கும் அந்த படம் தேசிய விருது வாங்கவேண்டும் என விருப்பம் இருந்ததாக கூறியுள்ளார். மேலும் அவர் பேசியது பற்றி பார்க்கலாம் .

இதையும் படிங்க : ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் டிக்கெட் ரூ 2000-மா? ரசிகர்கள் அதிர்ச்சி!

அயோத்தி படம் குறித்து இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பேச்சு

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், ” அயோத்தி எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம், நானும் இயக்குநர் மந்திரமூர்த்தியும் பல இடங்களில் சந்தித்திருக்கிறோம். கடந்த 2023ம் ஆண்டு வெளியான படங்களில், அயோத்தி மற்றும் பார்க்கின் படத்தின் மூலம் பல நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கிறோம்.

இதையும் படிங்க : கூலி படத்தில் ரஜினியின் இளமை கதாபாத்திரத்தில் பிரபல நடிகர்? கேமியோ ரோலில் இவரா?

எனக்கும் அயோத்தி படம் தேசிய விருதை வாங்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் எதற்காக அந்த படத்திற்கு கிடைக்கவில்லை என புரியவில்லை. நிச்சயமாக தேசிய விருதை பெறுவதற்கு அயோத்தி படமானது தகுதியான திரைப்படம்” என கூறியுள்ளார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் அயோத்தி படத்திற்கு நிச்சயமாக தேசிய விருது கிடைத்திருக்கவேண்டும் என சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பார்க்கிங் படக்குழு வெளியிட்ட பதிவு

அயோத்தி திரைப்படம் :

நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை ப்ரீத்தி அஸ்ரானியின் முன்னணி நடிப்பில் வெளியான படம் அயோத்தி. இந்த படமானது கடந்த 2023 ஆம் ஆண்டு உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் ஆர். மந்திரமூர்த்தி இயக்கியிருந்தார். இந்த படமானது வெளியாகி மக்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களையே பெற்றிருந்தது. மேலும் பல விருதுகளுக்கு இப்படமானது பரிந்துரைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.