8 ஆண்டுகளைக் கடந்தது ராம் சரண் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ரங்கஸ்தலம் – வீடியோ வெளியிட்ட படக்குழு

8 Years Of Rangasthalam: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ரங்கஸ்தலம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

8 ஆண்டுகளைக் கடந்தது ராம் சரண் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ரங்கஸ்தலம் - வீடியோ வெளியிட்ட படக்குழு

ரங்கஸ்தலம்

Published: 

30 Mar 2026 20:49 PM

 IST

தெலுங்கு சினிமாவில் கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி 2018-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ரங்கஸ்தலம். இந்தப் படத்தை இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ராம் சரண் நாயகானாக நடித்து இருந்த நிலையில் நடிகை சமந்தா ரூத் பிரபு நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜெகபதி பாபு, நரேஷ், பிரகாஷ் ராஜ், சுனில் பார்வே, ஆதி பினிசெட்டி, ரோகினி, ராஜீவ் கனகலா, அனசூயா பரத்வாஜ், பூஜிதா பொன்னடா, அன்னி, பிரம்மாஜி, ப்ருத்வி ராஜ், பானர்ஜி, சத்யா, அஜய் கோஷ், காதம்பரி கிரண், ஜோகி நாயுடு, கிருஷ்ணம்ராஜூ, ஷாகிங் சேத்ரு, ஷாகிங் சேத்ரு, ஷாகிங் சேத்ரு, ஷாகிங் செட்ரூ சேகர், கெட்அப் ஸ்ரீனு, பம்மி சாய், நவீன் நேனி, அமித் சர்மா, சுதாகர் மிஸ்ரா, வஜ்ஜா வெங்கட கிரிதர், முரளிதர் கவுட், நாக மகேஷ், பூஜா ஹெக்டே என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

8 ஆண்டுகளைக் கடந்தது ராம் சரணின் சூப்பர்ஹிட் ரங்கஸ்தலம் படம்:

இந்த சூப்பர் ஹிட் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் நவீன் எர்னேனி, யலமஞ்சிலி ரவிசங்கர் மற்றும் மோகன் செருக்குறி ஆகியோர் தயாரித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பீரியட் ஆக்‌ஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படத்தை கொண்டாடும் விதமாக படக்குழு வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… லீடர் பட விழாவில் அறந்தாங்கி நிஷாவை கடுமையாக சாடிய விடிவி கணேஷ்!

ரங்கஸ்தலம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை வைத்த மதராஸி பட தயாரிப்பாளர்!

Follow Us
Related Stories
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..