திரைத்துறையில் 50 ஆண்டுகளை கடந்த ரஜினிகாந்த் – மனிதன் படத்தை ரீ ரிலீஸ் செய்யும் படக்குழு
Rajinikanths Manithan Movie: சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்து தற்போதும் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இவரது பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக மனிதன் படத்தை மீண்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கோலிவுட் சினிமாவில் கடந்த 1987-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மனிதன். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் எழுதி இயக்கிய படம் மனிதன். இந்தப் படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ரூபிணி நடித்து இருந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிகர் ரகுவரன் கலக்கியிருப்பார். ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் படத்தில் வில்லனாக ரகுவரன் நடித்து இருந்தாலே ரசிகர்கள் அந்தப் படத்திற்கு அதிக அளவில் ஆர்வத்தை காட்டுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள்
ஸ்ரீவித்யா, ஜெய் கணேஷ், மாதுரி, வினு சக்கரவர்த்தி, சோ ராமசாமி, செந்தில், ஜி. சீனிவாசன் மற்றும் டெல்லி கணேஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரடெக்ஷன் சார்பாக தயாரிப்பாளர்கள் மு. சரவணன் மற்றும் எம்.பாலசுப்ரமணியம் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்திரபோஸ் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்த நிலையில் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




ரீ ரிலீஸாகும் ரஜினிகாந்தின் மனிதன் படம்:
இந்தநிலையில் திரையரங்குகளில் நடிகர் ரஜினிகாந்த் நடிகராக அறிமுகம் ஆகி 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழாவை கொண்டாடி வருகிறார். இதனை மேலும் கொண்டாடும் விதமாக மனிதன் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 38 வருடங்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் ரீ ரிலீஸ் வருகின்ற 10-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… இதயப்பூர்வமான கதை வருவதற்கு இன்னும் பத்து நாட்கள் உள்ளன – இட்லி கடை படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
✨ 38 YEARS LATER ✨
Superstar #Rajinikanth’s 1987 blockbuster #Manithan returns in a digitally restored version ❤️🔥Releasing Oct 10, 2025 across Tamil Nadu this Diwali 🎉
A golden celebration in his 50th year of cinema 💥pic.twitter.com/6wPiIyynvI#ManithanReRelease…— Ramesh Bala (@rameshlaus) September 22, 2025