Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cinema Rewind: ரகுவரன் ஒரு தீவிர நடிகர்.. ரேவதி சொன்ன உண்மை!

Revathi Talks About Actor Raghuvaran : தமிழ்ப் படங்களில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் சிறந்த நடிகராகவும், வில்லனாகவும் இருந்து வந்தவர் ரகுவரன். பழைய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இவர் மிகவும் பிரபலமானார். மேலும் இவர் அஞ்சலி படத்தில் நடித்ததை குறித்து நடிகை ரேவதி பேசிய விஷயம் குறித்துப் பார்க்கலாம்.

Cinema Rewind: ரகுவரன் ஒரு தீவிர நடிகர்.. ரேவதி சொன்ன உண்மை!
ரகுவரன் மற்றும் ரேவதி
Barath Murugan
Barath Murugan | Published: 06 Apr 2025 20:40 PM IST

நடிகர் ரகுவரன் (Raghuvaran)  ஆரம்ப காலகட்டத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து சினிமாவில் நுழைந்தார். தனது இளமைப் பருவத்திலிருந்தே படங்களில் நடிக்கவேண்டும் என்று ஆர்வம் கொண்ட இவருக்கு முதல் தமிழ்ப் படமாக அமைந்தது “ஏழாவது மனிதன்” (Ezhavathu Manithan) என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படமானது கடந்த 1982ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் நாசருடன் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார். இவர் தெடர்ந்து பட்டு பட்டு பட்டு, ஒரு ஓடை நதியாகிறது, குற்றவாளிகள் மற்றும் மிஸ்டர் பரத் என பல்வேறு படங்களில் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், வில்லனாக நடித்திருக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இவர் ரஜினியின் (Rajinikanth ) பாட்ஷா, அருணாச்சலம் போன்ற படங்களில் சிறப்பான வில்லனாக நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் கடந்த 1996ம் ஆண்டு நடிகை ரோகிணியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். பின் சில பிரச்சனைகளின் காரணமாக 2004ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

மேலும் இவர் தமிழில் இறுதியாக உள்ளம் என்ற படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார். இதற்குப் பின் கடந்த 2012ம் ஆண்டு தனது 49வது வயதில் காலமானார். இந்நிலையில், நடிகை ரேவதி அஞ்சலி படத்தில் ரகுவரனுடன் நடித்ததை பற்றிப் பேசிய விஷயம் குறித்து பார்க்கலாம்.

நடிகர் ரகுவரன் குறித்து ரேவதி பேசிய விஷயம் ;

நடிகர் ரேவதி முன்னதாக நேர்காணல் ஒன்றில் நடிகர் ரகுவரனுடன் நடித்தது குறித்துப் பேசியுள்ளார். அதில் அவர் “நடிகர் ரகுவரன் நடிப்பில் மிகவும் தீவிரமானவர். அஞ்சலி படத்தில் குழந்தைகளுடன் நடிக்கவேண்டும் என்று அவர் பாதி படத்தில் முட்டி போட்டுத்தான் நடிச்சாரு. ஏனென்றால் அவர் மிகவும் உயரமானவர். அவர் கேமராவில் குழந்தைகளுடன் இருக்கும் காட்சிகளில் முழுவதும் முட்டி போட்டுத்தான் நடித்திருந்தார்.

அஞ்சலி படத்தில் நடிகர் ரகுவரனுடன் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் நடிப்பில் மிகவும் திறமையானவராக இருப்பார். அவரின் நடிப்பிற்கு எளிதாக ஈடுகொடுக்க முடியாது. அந்த மாதிரியாக அஞ்சலி படத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கினார் எனவே சொல்லவே தேவையில்லை. படத்தின் ஷூட்டிங்கும் அவ்வளவு எளிதாக அமைந்தது.

அதைப் போல அஞ்சலி படமும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது” என்று நடிகை ரேவதி கூறியிருந்தார். தற்போது அவர் பேசிய பழைய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மறைந்த நடிகர் ரகுவரனின் நினைவை மக்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏற்படுத்தி வருகிறது.