Balti Movie: அதிரடி கதைக்களத்தில்.. ஷேன் நிகம்- சந்தனு பாக்யராஜின் ‘பல்டி’ பட ட்ரெய்லர் இதோ!
Balti Movie Trailer : மலையாள சினிமாவில் பிரபல இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஷேன் நிகம். இவர் மற்றும் தமிழ் நடிகர் சாந்தனு பாக்யராஜின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள படம் பல்டி. அதிரடி கபடி விளையாட்டு கதைக்களத்தில் உருவாகியுள்ள, இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் மாறுபட்ட கதைக்களத்தில் படங்களை கொடுத்து ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்துவரும் சினிமா மலையாளம் (Malayalam Cinema). இவ்வாறு மாறுபட்ட கதைக்களம் மற்றும் அதிரடி நடிகர்கள் என பல சாதனையாளர்களை இந்த சினிமா உருவாகிவருகிறது. அந்த வகையில் கபடி (Kabaddi) கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மலையாள திரைப்படம்தான் “பல்டி” (Balti). இந்த படத்தில் முன்னணி ஹீரோவாக நடிகர் ஷேன் நிகம் (Shane Nigam) நடித்துள்ளார். மேலும் அவருடன் தமிழ் பிரபல நடிகரான சாந்தனு பாக்கியராஜும் (Santhanu Bhagyaraj), மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது கபடி, காதல் மற்றும் அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் உன்னி சிவலிங்கம் (Unni Sivalingam) இயக்கியுள்ளார்.
மேலும் இதில், பிரபல இயக்குநர்களான செல்வராகவன் மற்றும் அல்போன்ஸ் புத்ரன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 2025 செப்டம்பர் 26ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அதை முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்ஷ்ன் கதையில் உருவாகியுள்ள “பல்டி” (Balti) பட ட்ரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.




இதையும் படிங்க : நான் ஒரு கதையை சொல்லி அத பிடிக்கலனு எந்த நடிகரும் சொன்னது இல்ல – இயக்குநர் அட்லி
பல்டி படத்தின் ட்ரெய்லர் தொடர்பான பதிவு :
#Balti official trailer is here
Cast: Shane Nigam, Shanthanu Bhagyaraj, Preethi Asrani, Alphonse Puthren, Poornima Indrajith, Selvaraghavan
Debut directorial by Unni Sivalingam#ShaneNigam’s 25 th Film@SaiAbhyankkar’s Malayalam Debut https://t.co/9UvJCkePSK
— AB George (@AbGeorge_) September 21, 2025
மலையாள சினிமாவில் அறிமுகமான சாய் அபயங்கர் ;
இளம் இசையமைப்பாளராக அனைவரின் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக இருந்து வருபவர் சாய் அபயங்கர். இவர் மலையாள சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம்தான் பல்டி.
இதையும் படிங்க : சரியான விமர்சனங்களை பாருங்க.. படம் எப்படி இருக்குனு நீங்க முடிவு பண்ணுங்க – தனுஷ் பேச்சு!
இந்த மலையாள சினிமாவில் இவரின் இசையமைப்பில் வெளியான, ஜாலக்காரி என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பல்டி படமானது மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்டி படத்தின் பட்ஜெட் :
இந்த பல்டி படமானது, மிகவும் வித்யாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளதாம். இதில் நடிகர்கள் செல்வராகவன், ஷேன் நிகம், சந்தனு பாக்யராஜ், நடிகை ப்ரீத்தி அஸ்ரானி, அல்போன்ஸ் புத்ரன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது முற்றிலும் கபடி கதைக்களம் சார்ந்த படமாக தயாராகியுள்ளது.
இப்படம் சுமார் ரூ 60 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டிற்கு சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.