இணையத்தில் கசிந்தது ரஜினிகாந்தின் கூலி… அதிர்ச்சியில் படக்குழு

Coolie Movie: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கூலி. இந்தப் படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் படம் கசிந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் கசிந்தது ரஜினிகாந்தின் கூலி... அதிர்ச்சியில் படக்குழு

கூலி

Published: 

15 Aug 2025 11:47 AM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று கூலி. இந்தப் படம் நேற்று 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி இருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே இருந்து கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் நாகார்ஜுனா, கார்த்திகேய தேவ், சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், ரசிதா ராம், கண்ணா ரவி, ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெஸி, சார்லி, காளி வெங்கட், லொள்ளு சபா மாறன், திலீபன், கராத்தே கார்த்தி, ரிஷிகாந்த், ரவி ராகவேந்திரா, ஐயப்ப பி.சர்மா, சுப்பிரமணியபுரம் டும்கா மாரி, பாபுராஜ், மகேஷ் மஞ்சரேக்கர், அஜய், தமிழ், இளைய எம்.ஜி.ஆர். அமீர் கான், பூஜா ஹெக்டே, ஷோபனா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் உள்ளது.

பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இந்த கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படமும் தற்போது ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது.

ரிலீஸான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வெளியான கூலி படம்:

இந்த நிலையில் படம் நேற்று காலை 5 மணி காட்சி வெளியானது. இதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே படம் இணையத்தில் கசிந்த செய்தி படக்குழுவினரிடையேயும், ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் வெளியாவதற்கு முன்பே நீதிமன்றம் படத்தை இணையத்தில் வெளியிடுபவர்களை தடுக்கும் விதமாக ஆணை பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

Also Read… ரசிகர்களுக்கு மட்டுமில்லை எனக்கும் அந்த கதாப்பாத்திரம் பிடிக்கவில்லை – நடிகை அனுபமா பரமேசுவரன்

கூலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Coolie Movie X Review: கோலாகலமாக வெளியான கூலி படம் – மக்களின் விமர்சனம் என்ன?