Rajinikanth : லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் எஸ்.எஸ்.ராஜமௌலி.. – ரஜினிகாந்த் அதிரடி!

Rajinikanth About Lokesh Kanagaraj : ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருபவர் ரஜினிகாந்த்தின் நடிப்பில் பான் இந்தியப் படமான கூலி ரிலீசிற்கு காத்திருக்கிறது. இந்த படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தெலுங்கு ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜை தமிழ் சினிமாவின் எஸ்.எஸ். ராஜமௌலி எனப் பாராட்டியுள்ளார்.

Rajinikanth : லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் எஸ்.எஸ்.ராஜமௌலி.. - ரஜினிகாந்த் அதிரடி!

ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ்

Published: 

04 Aug 2025 17:15 PM

 IST

நடிகர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் திரைப்படம் கூலி (Coolie). இந்த படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kaganaraj) இயக்கத்தில் உருவாகியுள்ளது.  இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.  இதற்கான புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander ) இசையமைக்க, கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. மிக பிரமாண்டமாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இப்படமானது உருவாகியிருக்கும் நிலையில், பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று 2025, ஆகஸ்ட் 4ம் தேதியில், கூலி படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த்,இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்துப் பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அவர் வீடியோ ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் அவர், “இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் கோலிவுட் சினிமாவில் எஸ்.எஸ். ராஜமௌலி எனக் கூறியுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : துல்கர் சல்மானின் 41வது படம்.. பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்!

லோகேஷ் கனகராஜ் குறித்து ரஜினிகாந்த் பேசியதாவது :

அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த், ” நான் சினிமாவிற்கு வந்தது 50வது வருடம் இது, டயமண்ட் ஜூப்ளி வருடம் இது. இந்த வருடத்தில் சன் பிக்ச்சர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் கூலி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படமானது வரும் ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் எஸ்.எஸ். ராஜமௌலி போன்றவர். இயக்குநர் ராஜமௌலியை போலவும், லோகேஷ் கனகராஜ் அனைத்து படங்களுக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது.” என நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : தேசிய விருதிற்கு பிறகு பொறுப்பு அதிகரித்துள்ளது – இயக்குநர் ராம்குமார்

கூலி திரைப்படத்தின் தெலுங்கு ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி :

நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த கூலி திரைப்படத்தில், பான் இந்தியப் பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா, மலையாளத்தில் சௌபின் சாஹிர், இந்தியில் ஆமிர்கான், கன்னடத்தில் உபேந்திரா என பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ருதி ஹாசன் மற்றும் நடிகர் சத்யராஜ் என பல்வேறு நடிகர்களும் உடன் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.