கருப்பு படத்திலிருந்து இன்று வெளியாகிறது ராத்து ராசன் பாடல்
Karuppu Movie Raathu Raasan Song Will Be Release Today | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தில் இருந்து முன்னதாக இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது பாடல் இன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராத்து ராசன்
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடைப்பெற்று வந்த நிலையில் படம் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தொடர்ந்து படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் படம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆனதால் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பதற்கு முன்னதாக ரசிகர்கள் தொடர்ந்து படத்தின் அப்டேட்டை கேட்டுக்கொண்டே இருந்தனர். இதனை ஆர்.ஜே பாலாஜியும் வலிமை படத்திற்கு பிறகு எனது படத்திற்கு தான் ரசிகர்கள் அதிக அப்டேட்டை கேட்டனர் என்று காமெடியாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தற்போது வெளியீட்டு தேதி அறிவித்ததன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். அதன்படி படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் படத்தில் இருந்து தொடர்ந்து பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் இன்று தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியை முன்னிட்டு இரண்டாவது சிங்கிள் வீடியோ வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருப்பு படத்திலிருந்து இன்று வெளியாகிறது ராத்து ராசன் பாடல்:
அதன்படி கருப்பு படத்தில் இருந்து முன்னதாக இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது பாடல் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகிறது. அதன்படி ராத்து ராசன் என்ற பாடல் இன்று மாலை வெளியாகிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… தலைவர் 173 படத்தை இயக்குவதில் இருந்து விலகினாரா சிபி சக்ரவர்த்தி – வைரலாகும் தகவல்
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Fire, beats and the celebration begins!#RaathuRaasan – Third single from #Karuppu dropping tomorrow 🔥
A @SaiAbhyankkar Musical 🎶
Worldwide in theatres, on May 14th 2026!@Suriya_offl @trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu @prabhu_sr #Indrans @natty_nataraj #Swasika… pic.twitter.com/H2U1bQsjL2
— DreamWarriorPictures (@DreamWarriorpic) April 13, 2026
Also Read… இணையத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது முட்டகலக்கி பாடல் – நெகிழ்ச்சியில் படக்குழு