சிலம்பரசன் – அஸ்வத் மாரிமுத்து படம் இப்படிதான் இருக்கும்… தயரிப்பாளர் ஓபன் டாக்
Silambarasan and Ashwath Marimuthu Movie : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக நடிகர் சிலம்பரசனின் 51-வது படத்தை இயக்க உள்ளார். இந்தப் படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சிலம்பரசன் - அஸ்வத் மாரிமுத்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சிலமபரசன் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அறிமுக வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த அரசன் படத்தின் முதற்கட்ட படிப்பிடிப்பு பூஜையுடன் கடந்த வாரம் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தொடர்ந்து புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்த அரசன் படத்தின் அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் படத்தின் வெளியீடு வருகின்ற 2026-ம் ஆண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாக உள்ள அடுத்தடுத்தப் படங்களின் அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி இயக்குநர் அஸ்வத் மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் உருவாக உள்ள படம் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா வெளிப்படையாக பேசியுள்ளார்.
சிலம்பரசன் – அஸ்வத் மாரிமுத்து படம் இப்படிதான் இருக்கும்:
அதன்படி தயாரிப்பாளர் அர்ச்சனா பேசுகையில் STR 51 படத்திற்குப் பாடல்களே இல்லை என்று சொன்னால் அஸ்வத் மிகவும் மனம் உடைந்து போவார். அவர் ஏற்கெனவே நான்கு நடனப் பாடல்களுக்குத் திட்டமிட்டுள்ளார். இது ஒரு காதல் திரைப்படம். நம்முடைய திரைப்படங்கள் பாடல்களால்தான் உயிர் பெறுகின்றன என்று நான் நம்புகிறேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படங்களில் பாடல்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அனிருத்தின் பின்னணி இசை அங்கே இருக்கிறது என்று தயாரிப்பாளர் அர்ச்சனா பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… வா வாத்தியார் படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
“Aswath will be heartbroken if I say no songs for #STR49💔. He already planned 4 Dance number🕺. It’s a romantic Film. I believe our movies live with the song. #LokeshKanagaraj films might not have songs, but Ani’s soundtrack is there🎶”
– #ArchanaKalpathipic.twitter.com/CcGWrr45PU— AmuthaBharathi (@CinemaWithAB) December 16, 2025
Also Read… விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்… வைரலாகும் ஜன நாயகன் பட அப்டேட்