பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? இணையத்தில் கசிந்த தகவல்

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 9 வாரங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 8-வது வாரம் பிக்பாஸில் எவிக்‌ஷன் எதுவும் இல்லாத நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற உள்ளது என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? இணையத்தில் கசிந்த தகவல்

பிக்பாஸ்

Published: 

07 Dec 2025 11:31 AM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 63 நாட்களை நிறைவு செய்துள்ளது. ஒவ்வொரு வாரமும் பிக்பாஸில் இருந்து போட்டியாளர்கள் வெளியேற்றப்படும் நிலையில் கடந்த 8-வது வாரம் மட்டும் நோ எவிக்‌ஷன் என்று விஜய் சேதுபதி கூறிவிட்டார். இதன் கரணமாக வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு தங்களின் ஆட்டத்தை ஆட மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 9-வது வாரத்தில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அணைவரும் இரண்டு அணிகளாக பிரிந்து ஜமீன்தார் டாஸ்க் வழங்கப்பட்டது. இந்த டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாட வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார். மேலும் எந்த அணி வெற்றிப் பெற்றதோ அவர்கள் வரும் வார நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் வரும் வாரத்தின் தலைவருக்கான போட்டியில் பங்கேற்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வீட்டில் ரெட்ரோ சினிமா மாடர்ன் சினிமா என பிரிந்து விளையாடிய போட்டியாளர்களில் ரெட்ரோ சினிமா அணியினர் வெற்றிப்பெற்றனர். இதனைத் தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியில் வாரம் முழுவதும் நடந்த கூச்சல்களையும் குழப்பத்தையும் விஜய் சேதுபதி பேசினார். அப்போது ரம்யா வீட்டை விட்டு வெளியேறுவதாக கூற அவருக்காக வீட்டின் கதவையும் விஜய் சேதுபதி திறந்து வைக்க சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ரம்யா மண்ணிப்பு கேட்டுவிட்டு மீண்டும் வீட்டிலேயே தங்கினார்.

9-வது வார இறுதியில் பிக்பாஸை விட்டு வெளியேறுவது யார் தெரியுமா?

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் ப்ராசஸ் இன்று நடைபெற உள்ளது. இதில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி குழு முதல் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வாரம் நாமினேஷனில் உள்ளவர்களில் சாண்ட்ரா, எஃப்ஜே மற்றும் பிரஜின் ஆகியோரைத் தவிற மற்றவர்கள் சேவ் என்று கூறிய விஜய் சேதுபதி இதில் இருந்து யார் வெளியேறுவார் என்று கேட்டார். அதில் வீட்டில் உள்ளவர்கள் பல கருத்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று பிக்பாஸில் இருந்து பிரஜின் வெளியேற உள்ள தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

Also Read… ஜிவி பிரகாஷின் அடுத்தப் படத்தின் டைட்டில் இதுதான்… வைரலாகும் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பெரிய பட்ஜெட்டில் தயாராகும் நடிகர் விஜய் சேதுபதியின் படம்? வைரலாகும் தகவல்

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை