விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவிற்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி
PM Modi Wishes Vijay Deverakonda and Rashmika Wedding: தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்கள் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அது வைரலாகி வருகின்றது.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா, பிரதமர் மோடி
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருகிறார்கள் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் கடந்த 2018-ம் ஆண்டில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலமாக இணைந்து நடித்தனர். இந்தப் படத்தில் இவர்களின் ஜோடியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து அடுத்ததாக டியர் காம்ரேட் படத்தின் இணைந்து நடித்தனர். இந்தப் படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் இவர்கள் இருவரும் குறித்த செய்தி மட்டும் தொடர்ந்து உலா வந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் நாளை 26-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திருமணம் நடைபெற உள்ளது. அந்த திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவிற்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி:
பிப்ரவரி 26, 2026 அன்று நடைபெற உள்ள விஜய் மற்றும் ராஷ்மிகாவின் திருமணத்திற்கா என்னை அழைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் தேவரகொண்டா மற்றும் மந்தனா குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இது விஜய் மற்றும் ராஷ்மிகாவின் வாழ்க்கையில் ஒரு புதிய, அழகான அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
விஜய் அல்லது ராஷ்மிகா இருவரும் தங்கள் படங்களில் கதைகளுக்குப் புதியவர்கள் அல்ல. ஆனால் அவர்களின் உண்மையான வாழ்க்கையின் இந்த தெய்வீக ஸ்கிரிப்ட் அத்தியாயம், அன்பும் பாசமும் நிறைந்தது, வெள்ளித்திரையில் அவர்கள் உருவாக்கிய மாயாஜாலத்தை நிச்சயமாக மிஞ்சும். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தம்பதியினருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும். அன்பான வாழ்த்துக்கள் என்று மோடி தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… கல்கி 2 படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த நடிகர் கமல் ஹாசன்… வைரலாகும் போட்டோ!
இணையத்தில் கவனம்பெரும் பிரதமர் மோடியில் வாழ்த்து பதிவு:
Hon’ble Prime Minister #NarendraModi has conveyed his heartfelt blessings and best wishes on the occasion of #VijayDeverakonda & #RashmikaMandanna’s wedding.
A gracious message that adds great joy and honour to the families on this auspicious celebration. 🙏#Virosh… pic.twitter.com/UKJUBEIRbD— Vamsi Kaka (@vamsikaka) February 25, 2026