பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டா? ரசிகர்களின் கருத்து இதுதான்!
Ustaad Bhagat Singh Movie X Review: நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் உஸ்தாத் பகத் சிங். இந்தப் படத்தினை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

உஸ்தாத் பகத் சிங்
தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் பவன் கல்யாண். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகின்றது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் பவன் கல்யாணின் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் உஸ்தாத் பகத் சிங். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து பிரபலங்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்த உஸ்தாத் பகத் சிங் படத்தை இயக்குநர் ஹரீஷ் ஷங்கர் எழுதி இயக்கி உள்ளார். இந்த நிலையில் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது.
உஸ்தாத் பகத் சிங் படத்தின் விமர்சனம்:
#UstaadBhagatSingh – Ugadi Entertainer👌
Childhood episode works well interval bang is a high. #Thaman BGM superb & #PawanKalyan vintage vibes are back.
Second half stays engaging with Ee Manase and solid BGM. #HarishShankar never disappoints fans. Predictable story but good… pic.twitter.com/UDWv81WK2A
— The South Cinemaa (@southcinemaaaa) March 19, 2026
உஸ்தாத் பகத்சிங் படம் உகாதியின் சிறப்பு படமாக உள்ளது. சைல்ட்ஹுட் எபிசோட் நன்றாக இருக்கிறது, இடைவேளையில் கண்கள் பளீர் என தெரிகின்றன. தமன் பேகம் சூப்பர், பவன் கல்யாணின் பழைய வைப்ஸ் மீண்டும் வந்துவிட்டன என்று தெரிவித்துள்ளனர்.
உஸ்தாத் பகத் சிங் படத்தின் விமர்சனம்:
1st half 👎
2nd half 👍
PawanKalyan – sreeleela scenes ❤️Overall review – 2.5/5
Ee manase song – 5/5 😍Aa okka song disaster nundi Average ga change chesindhi 🥵💕#UstaadBhagatSingh pic.twitter.com/czFSOgNJip
— APEX (@Predator4005) March 19, 2026
உஸ்தாத் பகத் சிங் படத்தின் முதல் பாதி நன்றாக இல்லை. இரண்டாம் பாதி ஓகே. பவன் கல்யாண் மற்றும் ஸ்ரீ லீலா காட்சிகள் சிறப்பாக உள்ளது. மொத்தமாக 5 மதிப்பெண்களுக்கு 2.5 மதிப்பெண்களை இந்தப் படத்திற்கு கொடுக்கலாம்,
உஸ்தாத் பகத் சிங் படத்தின் விமர்சனம்:
#UstaadBhagatSingh Review 🎬 [3.5/5] :
A full-on commercial package blending action, drama, and hero elevations.. 💪
Power star ⭐️ @pawankalyan carries the film with ease and electrifying presence..⚡️
The cult caption @harish2your ensures engaging moments with stylish…
— Ramesh Bala (@rameshlaus) March 19, 2026
உஸ்தாத் பகத் சிங் படத்திற்கு 3.5/5 மதிப்பெண் கொடுக்கலாம். முழுக்க முழுக்க ஆக்ஷன் ட்ராமா பாணியில் ஒரு கமெர்சியல் படமாக உள்ளது. படம் முழுக்க தனது அதிரடியான நடிப்பை பவர் ஸ்டார் பவன் கல்யாண் வெளிப்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஸ்தாத் பகத் சிங் படத்தின் விமர்சனம்:
Oka Jalsa, Oka Panjaa, Oka #TheyCallHimOG Ila annitiki 1st half >> 2nd half….
After a long time for #UstaadBhagatSingh hearing tha 2nd half is >>> 1st half🔥🔥🔥!
Ikkade gelichesam bro @harish2you ! Rare in commercial films! #PawanKalyan Vintage adhirindi anta… 🔥 pic.twitter.com/NIQfncEwnB— FILMOVIEW (@FILMOVIEW_) March 18, 2026
முதல் பாதி மிகவும் ஜாலியாகவும் கலகலப்பாகவும் செல்கிறது. மேலும் இறுதியாக பவன் கல்யாண் நடிப்பில் வெளியான தே கால் ஹிம் ஓஜி படத்தினைப் போல உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு உஸ்தாத் பகத் சிங் படம் இரண்டாம் பாதி முதல் பாதியை விட சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பவன் கல்யாணின் விண்டேஜ் போர்ஷன் அதிருகிறது.
உஸ்தாத் பகத் சிங் படத்தின் விமர்சனம்:
#UstaadBhagatSingh – Outdated 😒
Sorry But Truths hurt sometimes.#UstaadBhagatSinghReview pic.twitter.com/7ks2Q8sMkB— Cinema Generation (@gencinemaOff) March 18, 2026
உஸ்தாத் பகத் சிங் மிகவும் பழைய கதையைக் கொண்டுள்ளது. மண்ணிச்சுடுங்க, சில நேரங்களில் உண்மைகள் கசக்கதான் செய்யும் என்று இந்த பதிவில் தெரிவித்துள்ளனர்.