பிபாஸில் 8 சீசன்களாக தொடர்ந்து வெற்றிபெறும் ஆண் போட்டியாளர்கள் – எந்த மொழியில் தெரியுமா?

Bigg Boss: இந்தி சினிமாவில் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல தென்னிந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தென்னிந்திய மொழிகளில் ஒன்றில் கடந்த 8 சீசன்களாக ஆண்கள் மட்டுமே வெற்றியாளர்களாக உள்ளனர்.

பிபாஸில் 8 சீசன்களாக தொடர்ந்து வெற்றிபெறும் ஆண் போட்டியாளர்கள் - எந்த மொழியில் தெரியுமா?

பிக்பாஸ் தெலுங்கு

Published: 

17 Sep 2025 20:30 PM

 IST

வெளிநாடுகளில் ஹிட் அடித்த பிக் பிரதர் (Bigg Brother) என்ற நிகழ்ச்சியை கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பிக்பாஸ் (Bigg Boss) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. முதலில் இந்தி சினிமாவில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 19-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தென்னிந்திய மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு என தொடர்ந்து 8 சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதன்படி 9-வது சீசன் தற்போது தெலுங்கு சினிமாவில் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. தமிழில் வருகின்ற அக்டோபர் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு முதல் 9-வது சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. மேலும் தொடர்ந்து 9-வது சீசனில் யார் யார் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளார்கள் என்பது குறித்து தகவல்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 8 சீசன்களில் 6 சீசன்களில் ஆண் போட்டியாளர்களும் 2 சீசன்களில் பெண் போட்டியாளர்களும் வெற்றிப் பெற்றுள்ளனர். அதன்படி முதல் சீசனில் ஆரவ், 2-வது சீசனின் ரித்விகா, 3-வது சீசனில் முகேன் ராவ், 4-வது சீசனில் ஆரி அர்ஜுனன், 5-வது சீசனில் ராஜூ ஜெயமோகன், 6-வது சீசனில் அசீம், 7-வது சீசனில் அர்சனா மற்றும் 8-வது சீசனில் முத்துகுமரன் ஆகியோர் வெற்றிப்பெற்றுள்ளனர்.

தெலுங்கு பிக்பாஸில் தொடர்ந்து வெற்றிபெறும் ஆண் போட்டியாளர்கள்:

இந்த நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் 9-வது சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் தொடர்ந்து 8 சீசன்களாக ஆண் போட்டியாளர்களே வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால் ஒரு சீசனில் கூட பெண் போட்டியாளர்கள் வெற்றிப் பெறவில்லை என்பது பார்வையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக இந்த 9-வது சீசனிலாவது பெண் போட்டியாளர் வெற்றிப்பெறுவார் என்று ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து மலையாள பிக்பாஸ் தீயாய் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் நாகர்ஜுனா அப்படி இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… நெட்ஃபிலிக்ஸில் இருந்து திடீரென நீக்கப்பட்ட அஜித்தின் குட் பேட் அக்லி படம் – என்ன காரணம் தெரியுமா?

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சிக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Rajinikanth : கதை.. இயக்குநர்.. கேரக்டர்.. கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிப்பது குறித்து பேசிய ரஜினிகாந்த்!