பொங்கல் ரிலீஸில் வரிசைக்கட்டும் புதுப் படங்கள்… லிஸ்ட் இதோ
Pongal Release Movies List: தமிழ் சினிமாவில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் ஜன நாயகன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் தள்ளிப்போன நிலையில் தற்போது புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

படங்கள்
தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய சினிமா முழுவதும் பண்டிகை காலத்தில் படங்கள் வெளியாவது தொடர்ந்து வழக்கமாகவே உள்ளது. அதன்படி இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னிந்திய சினிமாவில் பல புதியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவிலும் இந்த பொங்கல் பண்டிகயை மக்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு காரணம் கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாவதாக கூறப்பட்டு இருந்ததுதான். இந்தப் படம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகு இறுதிப் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் ஜன நாயகன் படத்திற்கு உறிய நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் தள்ளிப்போனது.
மேலும் நடிகர் தளபடி விஜயின் படம் பொங்கல் பண்டிகையில் வெளியாவதாக இருந்த காரணத்தால் பலப் படங்கள் தங்களது வெளியீட்டு தேதியை ஒத்தி வைத்து இருந்தனர். ஆனால் ஜன நாயகன் வெளியாகாமல் தள்ளிப்போன காரணத்தால் பலப் படங்கள் தற்போது பொங்கல் ரேசில் கலம் இறங்கி உள்ளது. இதில் பலப் புதுப் படங்களும் ரீ ரிலீஸ் படங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் ரிலீஸில் வரிசைக்கட்டும் புதுப் படங்கள்:
அந்த வகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் முன்னதாக வெளியாக இருந்து பின்பு ஒத்திவைக்கப்பட்ட வா வாத்தியார் படம் வருகின்ற 14-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டும் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி உள்ள தலைவர் தம்பி தலைமையில் படம் மற்றும் இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரௌபதி 2 படம் ஆகியவை வருகின்ற 15-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also read… ராணா மற்றும் பேசில் ஜோசஃபிற்கு போஸ்டர் வெளியிட்டு நன்றி தெரிவித்த பரசக்தி படக்குழு!
வா வாத்தியார் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவு:
This Pongal, feel the power, emotion, and style of Vaathiyaar 🔥#VaaVaathiyaar — In cinemas from January 14.#VaaVaathiyaarPongal ✨ pic.twitter.com/ui4koB8zKm
— Studio Green (@StudioGreen2) January 11, 2026
Also read… நான் நடிகராக கட்டாயப்படுத்தப்பட்டேன்… நடிகர் ரவி மோகன்