சூர்யாவின் 47-வது படத்தில் இணையும் எதிர்பாராத காம்போ.. அட இந்த ஜோடி இணைந்து நடிக்கிறதா?

Suriya47 Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் முன்னணி நடிப்பில் கருப்பு மற்றும் சூர்யா46 போன்ற படங்கள் உருவாகிவருகிறது. இந்நிலையில் இப்படத்தை அடுத்ததாக மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 படம் உருவாகவுள்ளது. இதில் பிரபல மலையாள தம்பதி இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது.

சூர்யாவின் 47-வது படத்தில் இணையும் எதிர்பாராத காம்போ.. அட இந்த ஜோடி இணைந்து நடிக்கிறதா?

சூர்யா

Published: 

27 Oct 2025 21:33 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் முன்னணி நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). இந்த திரைப்படமானது கடந்த 2025 மே மாதத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தை அடுத்ததாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகிவரும் படம்தான் கருப்பு (Karuppu) . இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ.Balaji) இயக்கியிருக்கும் நிலையில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyangkkar) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் காட் மோட் என்ற பாடலானது தீபாவளியை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்ததாக தெலுங்கில் இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா46 என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்ததாக மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில் சூர்யா47 (Suriya47) படமானது உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா முன்னணி நாயகனாக நடிக்கவுள்ள நிலையில், அவரே இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தில் பிரபல மலையாள ஜோடி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அது வேறு யாருமில்லை நஸ்ரியா மற்றும் ஃபகத் ஃபாசில்தான் (Nazriya and Fahadh Faasil).

இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் கம்ருதின் – துஷார் இடையே கைகலப்பு – வைரலாகும் வீடியோ!

சூர்யா47 படத்தில் இணையும் மலையாள ஜோடி :

இந்த சூர்யா47 படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த் படத்தில் கதாநாயகியாக நடிகை நஸ்ரியா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், மேலும் நடிகர் ஃபகத் ஃபாஸிலும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சீதா ராமன் பட இயக்குநருடன் கூட்டணி… பிரபாஸின் புது பட டைட்டில் போஸ்டர் வெளியானது!

இப்படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் நெகடிவ் வேடத்தில் நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. விரைவில் இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்பு படத்தின் முதல் பாடல் குறித்து சூர்யா வெளியிட்ட பதிவு :