புதிய தொழில் தொடங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா… வைரலாகும் பதிவு
Actress Rashmika Mandanna: பான் இந்திய நடிகையாக தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது புதிதாக தொழில் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ராஷ்மிகா மந்தனா
கன்னட சினிமா மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna). இவர் கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் பல ஹிட் படங்களை கொடுத்தது என்னமோ தெலுங்கு சினிமாதான். தற்போது தெலுங்கு மொழியில் மட்டும் இன்றி தமிழ், இந்தி என பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட் ரியாக்ஷன்களை ரசிக்கும் ரசிகர்கள் நடிகை ராஷ்மிகா மந்தனாவை நேஸ்னல் க்ரஸ் (National Crush) என்று செல்லமாக அழைப்பது வழக்கம். தொடர்ந்து பான் இந்திய அளவில் பிசியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது புதிதாக தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா டியர் டைரி என்ற ஹேஷ்டேக் மூலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அனுபவங்களை ரசிகர்களிடம் தெரிவித்து வந்தார். இது இவருக்கும் ரசிகர்களுக்கு இடையே ஒரு நல்ல பாலமாக இருந்து வந்தது.
தொழிலதிபராக மாறிய நடிகை ராஷ்மிகா மந்தனா:
இந்த நிலையில் தனது ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமான டியர் டைரி என்ற ஹேஷ்டேக்கை பிராண்டின் பெயராக மாற்றிய நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது வாசனை திரவியம் தயாரித்து விற்கும் தொழிலை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவுடன் வீடியோ காலில் பேசுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு அறிவித்து இருந்தார்.
Also read… மாரீசன் VS தலைவன் தலைவி… ஜூலை 25-ம் தேதி எந்த படத்தை முதலில் பார்ப்பீங்க?
புதிய தொழில் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு:
அதனைத் தொடர்ந்து அவர் என்ன தொழில் செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது வாசனை திரவியம் தொழிலை அவர் கையில் எடுத்துள்ளது அவரது இன்ஸ்டா பதிவின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also read… கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த ஹம்சினி என்டர்டெயின்மென்ட்!
தொடர்ந்து சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வரும் பலர் தங்களது சொந்த ஃபேஷன் பிராண்டைத் தொடங்கி நடத்தி வரும் நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளார். இவரின் இந்த புதிய தொழிலுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.