Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Naren: ஜனநாயகன் படத்தில் எனது கதாபாத்திரம் இதுதான்.. நடிகர் நரேன் பகிர்ந்த தகவல்!

Narens Role In Jana Nayagan Movie : தளபதி விஜய்யின் முன்னணி நடிப்பில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியிருப்பது ஜன நாயகன். இந்த படத்தில் தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இதில் நடிகர் நரேனும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், அவரின் கதாபாத்திரம் குறித்து அவர் பேசியுள்ளார்.

Naren: ஜனநாயகன் படத்தில் எனது கதாபாத்திரம் இதுதான்.. நடிகர் நரேன் பகிர்ந்த தகவல்!
நரேன் மற்றும் தளபதி விஜய் Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 02 Aug 2025 22:30 PM

இயக்குநர் ஹெச். வினோத்தின் (H. Viinoth) இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் தளபதி69 (Thalapathy69) திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முன்னணி ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் தளபதி விஜய் முதன் முறையாக இந்த கூட்டணியில் படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருக்கும் நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வருகிறது. தளபதி விஜய்யின் இப்படத்தில் அவருடன் முக்கிய வேடத்தில் பல நடிகர்கள் நடித்துள்ளனர். அதில் நடிகர் நரேனும் (Naren) ஒருவர்.

இவர் லோகேஷ் கனகராஜின் கைதி மற்றும் விக்ரம் படத்தில், முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். அதைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் நரேன் தனது கதாபாத்திரம் என்ன என்பதைப் பற்றி கூறியுள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ஜன நாயகன் படத்தில் “விஞ்ஞானி”கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : நேர்மையான போலீஸ்.. ஜனநாயகன் கதை இதுவா?

ஜன நாயகன் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நரேன் பேச்சு :

அந்த நேர்காணலில் நடிகர் நரேனிடம், தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தில் நடித்தது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் நரேன், “இந்த ஜன நாயகன் படத்தில் ஒரு விஞ்ஞானி வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். அது இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோல்தான். ஆனாலும் ஜன நாயகன் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமாகும். அதற்கான ஷூட்டிங்கையும் முழுமையாக முடித்துவிட்டேன்” என நடிகர் நரேன் அதில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜ் எந்த படம் பண்ணாலும்… அனிருத் அதிரடி!

ஜன நாயகன் நடிகர் நரேன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Narain Ram (@narainraam)

தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றிவரும் நிலையில், மிகவும் மாஸ் பாடல்கள் மற்றும் பின்னணி இசையுடன் இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜூ, வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹாசன், நரேன் என பல்வேறு பிரபலங்கள் நடித்திருக்கிறனர். இந்த படமானது 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகக் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.