Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

OTT Movies: உணவுக்காக அடித்துக்கொள்ளும் கைதிகள்.. மிரள வைக்கும் ஓடிடி படம்!

2019ல் வெளியான ஸ்பானிஷ் த்ரில்லர் திரைப்படம் "தி பிளாட்ஃபார்ம்" ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதாகும். செங்குத்தான சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதிகளின் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் ஏற்படும் போராட்டங்களை இப்படம் விளக்குகிறது. உணவுப் பகிர்வு மூலம் சமூக அநீதியை இப்படம் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

OTT Movies: உணவுக்காக அடித்துக்கொள்ளும் கைதிகள்.. மிரள வைக்கும் ஓடிடி படம்!
The Platform
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 03 Jul 2025 09:30 AM

த்ரில்லர் படம் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு குஷியாகி விடும். பரபரப்பான திரைக்கதையில் நம்மை கட்டிப்போடும் காட்சிகளுடன் ஒரு நிறைவான படம் பார்த்த திருப்தி ஏற்பட்டு விடும். அது எந்த மொழி படமாக இருந்தாலும் ரசிகர்கள் சரியான வரவேற்பு கொடுப்பார்கள். அந்த வகையில் 2019ல் வெளியான “The Platform” படத்தினைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். ஸ்பானிஷ் மொழியில் வெளியான இப்படத்தை கால்டர் காஸ்டெலு-உருட்டியா இயக்கியிருந்தார். டேவிட் டெசோலா தான் எழுதிய கதைக்கு, பெட்ரோ ரிவேரோவுடன் சேர்ந்து திரைக்கதை எழுதியிருந்தார். ஜான் டி. டோமிங்குவேஸ் ஒளிப்பதிவு செய்ய, அரான்சாசு கல்லேஜா இசையமைத்திருந்தார். The Platform படத்தில் இவான் மாசகுவே,ஜோரியன் எகுலியர், அன்டோனியா சான் ஜுவான், எமிலியோ புவாலே, அலெக்ஸாண்ட்ரா மசங்கே உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படத்தின் கதை

Vertical Self-Management Center என்ற பெயர் கொண்ட சிறைச்சாலையில் தான் மொத்த படமும் நடைபெறுகிறது. அங்கு பெரும் குற்றங்கள் செய்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளார். செங்குத்தாக அமைக்கப்பட்டிருக்கும் அந்த சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்ட தளங்கள் உள்ளது. ஒவ்வொரு மாதமும், கைதிகள் கோபுரத்தின் பல தளங்களுக்கு மாற்றம் செய்யப்படுவார்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை உணவானது கீழ் தளத்தில் இருந்து மேல் தளம் வரை செல்லும். ஒவ்வொரு தளத்திலும் 2 நிமிடங்கள் மட்டுமே நிற்கும். ஒவ்வொரு தளத்தில் நிற்கும்போது மட்டுமே கைதிகளால் சாப்பிட முடியும். மாறாக அவர்கள் உணவை பதுக்கினால் அதற்கு தண்டனை உண்டு.

ஒவ்வொரு தளத்திலும் உணவு காலியாகும் பட்சத்தில் கடைசி கட்டத்தில் இருப்பவர்களுக்கு உணவு கிடைக்காமல் போய்விடும். இதனால் அந்த சிறை கைதிகள் தங்களுக்குள் சண்டையிட்டு நரமாமிசம் சாப்பிடும் அளவுக்கு செல்லும் மோசமான சூழலை அந்த சிறை ஏற்படுத்துகிறது. அந்த சிறையில் இன்னொருவருக்காக உள்ளே வந்த ஹீரோ இவான் மாசகுவேவும், தன் குழந்தையை தேடி வந்த அலெக்ஸாண்ட்ரா மசங்கே ஆகிய இருவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே The Platform படத்தின் கதையாகும்.

படத்தின் சிறப்புகள்


The Platform படத்தின் படப்பிடிப்பு ஆறு வாரங்கள் மட்டுமே நடைபெற்றது. செல்வம் மனிதர்களிடையே நியாயமாக பகிரப்பட வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பில்பாவோவில் உள்ள ஒரு துறைமுகத்தில் இந்த படத்திற்காக சிறைச்சாலை செட் போடப்பட்டது.

உணவின் மூலம் மனிதர்களிடையே இருக்கும் பேராசை, பசி செய்யும் உணவின் மீதான வெறி போன்றவை வெளிப்படையாக உணர்த்தப்பட்டதாக விமர்சகர்களிடையே பாராட்டைப் பெற்றது. படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் சமூகத்தின் பிரதிபலிப்பு என இயக்குநர் கால்டர் காஸ்டெலு-உருட்டியா தெரிவித்திருந்தார். இந்த படத்தின் 2ஆம் பாகம் 2024 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படமானது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பார்த்து மகிழுங்கள்.