OTT Movies: தொடர் கொலைகள்.. விசாரணையில் ட்விஸ்ட்.. இந்த படம் தெரியுமா?
தொடர் கொலைகளை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள், ஒரு மனநல மருத்துவரின் உதவியை நாடுவது பற்றியது கதையாக காப்பி கேட் அமைந்தது. சிகோர்னி வீவர், ஹோலி ஹண்டர் ஆகியோர் நடித்த இப்படத்தின் திரைக்கதை, ஆரம்பத்தில் வேறு விதமாக இருந்ததையும், பெண் கதாபாத்திரங்களுடன் செம்மைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படம் என்றால் ரசிகர்களிடம் எப்போதும் ஆதரவு இருக்கும். அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு ஜான் அமீல் இயக்கத்தில் வெளியான சைக்கோ த்ரில்லர் படமான Copy cat படம் பற்றி நாம் காணலாம். இந்த படத்திற்கு ஆன் பைடர்மேன், டேவிட் மேட்சன் ஆகியோர் கதை எழுதியிருந்தனர். இந்த படத்தில் சிகோர்னி வீவர், ஹோலி ஹண்டர்,ஹாரி கோனிக் ஜூனியர்,வில்லியம் மெக்னமாரா, JE ஃப்ரீமேன்,வில் பாட்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வார்னர் பிரதர்ஸ் விநியோகம் செய்த இப்படத்திற்கு லாஸ்லோ கோவாக்ஸ் ஒளிப்பதிவு செய்த நிலையில் கிறிஸ்டோபர் யங் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் கதை மற்றும் முக்கியமான சம்பவங்கள் பற்றிக் காணலாம்.
படத்தின் கதை
பல்கலைக்கழகம் ஒன்றில் கிரிமினல் சைக்காலஜி தொடர்பான கருத்தரங்கம் ஒன்று நடைபெறுவதில் இருந்து படம் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் உலாவும் தொடர் கொலையாளிகள் குறித்து டாக்டர் ஹெலன் ஹட்சன் உரையாற்றுகிறார். பின்னர் அவர் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கின் கழிப்பறைக்கு செல்கிறார். அங்கு சிறையில் இருந்து தப்பித்த நபரான டேரில் லீ கல்லம் என்பவரால் கொடூரமாக தாக்கப்படுகிறார். இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்படுகிறார். ஆனால் மீண்டும் டேரில் லீ கல்லம் போலீசாரால் பிடிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறார். இதன்பிறகு டாக்டர் ஹெலன் பதட்டமடையும் நோயால் அவதிப்படுகிறார்.




ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டு அவரது நண்பர் ஆண்டியின் உதவியால் தொழில்நுட்ப வசதியுடன் தன்னுடைய வாழ்க்கையை மேற்கொள்கிறார். இதற்கிடையில் சான் பிரான்சிஸ்கோ முழுவதும் கொலைகள் நடைபெறுவதால் மக்கள் அச்சப்படுகின்றனர். இந்த வழக்குகளை விசாரிக்கும் துப்பறியும் பெண் நிபுணரான எம்.ஜே.மோனஹன் மற்றும் சக அதிகாரி ரூபன் கோட்ஸ் இருவரும் ஹெலனின் உதவியை நாடுகின்றனர்.
முதலில் அவர்களுக்கு உதவ ஹெலன் மறுக்கும் நிலையில், பின் கொலையாளிகள் போடும் சுவாரஸ்யமான ஸ்கெட்ச் பற்றி தெரிய வந்ததும் ஒப்புக் கொள்கிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மிகவும் விறுவிறுப்பான ட்விஸ்டுடன் படமானது நிறைவடைகிறது.
படத்தின் சிறப்புகள்
Today I watched the movie Copycat (1995)
Psychological thriller crime film directed by Jon Amieland written by Ann Biderman, David Madsen
The story of the Copycat crimes modeled this’s film clearly describes the copycat crimes of serial killers in their crime patterns pic.twitter.com/6iPhgw1Tm0— @Focus (@Phuvakorn_Focus) June 21, 2025
ஆரம்பத்தில் இந்த படத்தின் கதை எழுதும்போது திரைக்கதையில் எம்.ஜே. மோனஹன் கேரக்டர் ஒரு ஆண் என எழுதப்பட்டது. அவருக்கும் ஹெலன் ஹட்சனுக்கும் இடையில் காதல் உருவாவதாகவும் சேர்க்கப்பட்டது.பின்னர் தான் சைக்காலஜி தொடர்பான கதையில் பெண் கதாபாத்திரங்களை வைத்து கதையை நகர்த்தலாம், காதல் பகுதியை தூக்கி விடலாம் என முடிவு செய்யப்பட்டு எல்லாம் மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் தடயவியல் மனநல மருத்துவரான பார்க் டயட்ஸுடன் ஹீரோயினான சிகோர்னி வீவர் தனது கேரக்டருக்கு முழுவதுமாக தயாரானார். இந்த படமானது விமர்சகர்களிடையே சிறந்த பரபரப்பான திரைக்கதை கொண்டது என பாராட்டைப் பெற்றது. இந்த படத்தை நாம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.