Sai Abhynkkar: தனுஷின் டி55 படத்தின் இசையமைப்பில் தீவிரமாக இறங்கிய சாய் அபயங்கர் – வைரலாகும் பதிவு!

D55 Movie Update: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் டி55. இந்த படமானது ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், இப்படத்தில் இசையமைப்பு பணிகளை தொடங்கியதாக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

Sai Abhynkkar: தனுஷின் டி55 படத்தின் இசையமைப்பில் தீவிரமாக இறங்கிய சாய் அபயங்கர் - வைரலாகும் பதிவு!

சாய் அபயங்கர் மற்றும் தனுஷ்

Updated On: 

17 Apr 2026 19:58 PM

 IST

கோலிவுட் சினிமாவில் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்த போன்ற மொழிகளில் தொடர்ந்து படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் தற்போது இவர் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக தேரே இஷ்க் மே (Tere Ishq Mein) படமானது வெளியாகியிருந்தது . இந்தி மொழியில் வெளியான இப்படம் சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. இதையடுத்து வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் கர (Kara). இந்த படமானது தனுஷின் நடிப்பில் அதிரடி திரில்லர் கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இந்த வரிசையில் அமரன் (Amaran) பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் புத்தம் புது படம்தான் டி55 (D55).

இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhynkkar) ஒப்பந்தமாகியுள்ளார். அந்த விதத்தில் இவர் தற்போது தனுஷின் டி55 படத்தின் இசையமைப்பு பணியில் உள்ளதாக அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அண்ட் பதிவில் தனுஷுடன் இருக்கும்படியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: இவருக்கு 60 வயசுனு சொன்னா யாராச்சும் நம்புவாங்களா? பிறந்த நாளில் வீடியோ வெளியிட்ட விக்ரம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

டி55 படத்தின் இசையமைப்பில் இருப்பது குறித்து சாய் அபயங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த டி55 படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா போன்ற நடிகைகள் இணைந்து நடித்துவருகிறார்கள். மேலும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் மம்முட்டி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவரின் கதாபாத்திரம் நெகடிவ் கலந்த கத்பாத்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகிவருகிறதாம். சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இருவருமே நல்ல நடனகலைஞர்கள் என்பது அனைவருக்குமே தெரிந்தது.

இதையும் படிங்க: சியான் விக்ரமின் 63வது படத்தின் அறிவிப்பு வீடியோ இதோ!

அந்த விதத்தில் சாய் அபயங்கரின் இசையமைப்பில், இவர்கள் இருவருமே இணைந்து நடனமாடும் பாடல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படமானது திரில்லர், எமோஷனல் மற்றும் கமர்ஷியல் பொழுதுபோக்கு படத்தை போலவே தயாராகிவருகிறதாம். அந்த வகையில் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடியாத நிலையில், படம் 2027ம் ஆண்டிற்கு ரிலீஸ் தள்ளிப்போகலாம் என வட்டாரங்கள் கூறுகிறது. இதை தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்களும் சிறப்பாக வெளியாகிவரும் என கூறப்படுகிறது.

Follow Us
வெறும் 9 ரூபாய் சம்பள உயர்வு.. இணையத்தில் வைரலாகும் பதிவு..
பெங்களூருவில் 500 ரூபாயில் வாழ முடியும் - வைரலாகும் பெண்ணின் அனுபவம்
கிளினிக்குள் சிக்கிய சிறுவன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ..
காதலனுக்காக பெற்றோருக்கு விஷம் கொடுத்த சிறுமி.. இணையத்தில் கசிந்த ஆடியோ..