சூர்யா சாரின் அந்த படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும் – சாய் அபயங்கர் பேச்சு!
Sai Abhyankkar Favorite Suriya Films: தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக இருந்துவருபவர் சாய் அபயங்கர். இவர் சூர்யாவின் கருப்பு படத்திற்கு இசையமைத்திருக்கும் நிலையில், வரும் 2026 மே 14ம் தேதியில் திரைப்படம் வெளியாகிறது. அந்த வகையில் சாய் அபயங்கர், தனக்கு பிடித்த சூர்யாவின் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பேசியுள்ளார்.

சாய் அபயங்கர் மற்றும் சூர்யா
இளம் இசையமைப்பாளராக தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்துவருபவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). இவரின் இசையில் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இந்த கருப்பு திரைப்படத்தில் நடிகர் சூர்யா (Suriya) லீட் நாயகனாக இருக்க, அவருக்கு ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது சாய் அபயங்கர் முதல் முறையாக ஒப்பந்தமான பிரம்மாண்ட பட்ஜெட் படமாகும். இதை ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியிருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் சாய் அபயங்கரின் இசையமைப்பில், இதுவரை 4 பாடல்கள் கருப்பு படத்திலிருந்து வீலியாகியுள்ளது.
அது தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது. அந்த வகையில் இப்படத்தின் ஆடியோ லாஞ்சில் பேசிய சாய் அபயங்கர், தனக்கு பிடித்த மற்றும் மீண்டும் மீண்டும் பார்த்த சூர்யாவின் படங்கள் என்னென்ன என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: கலைஞர் கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார் – வைரலாகும் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் பதிவு
தனக்கு பிடித்த சூர்யாவின் திரைப்படங்கள் என்னென்ன என்பது பற்றி சாய் அபயங்கர் பேச்சு:
அந்த நிகழ்ச்சியில் சாய் அபயங்கர் பேசுகையில், “ஒருநாள் எனக்கு திங்மியூசிக் சேனலில் இருந்து சந்தோஷ் அண்ணா போன்கால் பண்ணியிருந்தார், சூர்யா சார் படம் ஒண்ணு வந்துருக்கு பண்றியா? என கேட்டாரு. மேலும் நானும் சூர்யா சார் திரைப்படங்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன். அதிலும் எனது மிகவும் பிடித்தமான திரைப்படங்கள் என்றால் 24, அயன் மற்றும் வாரணம் ஆயிரம் என அந்த மாதிரியாக நிறைய படம் எனக்கு பிடிக்கும் சொல்லிக்கொண்டே போலாம்.
இதையும் படிங்க: சல்மான்கான் – நயன்தாராவின் படத்தில் வில்லன் வேடத்தில் இரு நடிகர்கள்.. யார் யார் தெரியுமா?
இந்த மூன்றும் கல்டாக திரும்ப திரும்ப பார்க்கக்கூடிய திரைப்படங்கள். இவ்வாறு சூர்யா சாரின் படங்களை பார்த்து வளர்ந்த என்னிடம், சூர்யா சாரின் படத்திற்கு மியூசிக் பண்றியானு கேட்ட என்ன சொல்லுவேன். என்னிடம் கேட்கவே கேட்காதீர்கள், நான் ஏற்கனவே பண்ணவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன் என சொன்னேன்” என்று அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்திருந்தார்.
சூர்யாவின் கருப்பு திரைப்படம் குறித்து சாய் அபயங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
https://t.co/jZTtesqJkx
Hope you all like it ♥️
Karuppa kooda va 🙏🏻⭐️— abhyankkar (@SaiAbhyankkar) April 28, 2026
சூர்யாவின் கருப்பு படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு சென்சாரும் யு/ஏ கிடைத்துள்ளது. அந்த வகையில் இப்படத்தை 13 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் திரையரங்குகள் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.