AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரபல யூடியூபர் ஜி.பி. முத்து குடும்பத்தினர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு.. என்ன காரணம்!

YouTuber GP Muthu : தூத்துக்குடி மாவட்டத்தில் முள் செடிகளை அகற்றிய சம்பவத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் பிரபல யூடியூபர் ஜி. பி. முத்து குடும்பத்தினர் மற்றும் எதிர் தரப்பினர் என 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல யூடியூபர் ஜி.பி. முத்து குடும்பத்தினர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு.. என்ன காரணம்!
யூடியூபர் ஜி.பி.முத்து உள்பட 11 பேர் மீது வழக்கு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 11 May 2026 07:53 AM IST

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பேருந்து நிலையம் சாலை பரதர் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி. ( 44 வயது). நகை தொழிலாளியான இவர், தனது மகள் மற்றும் அண்ணன் மகள் ஆகியோரை தனது இரு சக்கர வாகனத்தில் டியூஷனில் விடுவதற்காக அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பிரபல யூடியூபர் ஜி. பி. முத்து வீட்டின் வழியாக சென்றபோது, அவரது வீட்டில் வெளியே வளர்க்கப்பட்டு வந்த முள் செடி சுடலையாண்டியின் மகள் இடது கண்ணில் குத்தி காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், வலி தாங்க முடியாமல் அந்த சிறுமி கத்தி கூச்சலிட்டார். உடனே, சுடலையாண்டி தனது இரு சக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு வந்து அந்த முள் செடிகளை அகற்றியதாக கூறப்படுகிறது. பின்னர், சுடலையாண்டி ஆகியோர் அங்கிருந்து சென்று விட்டனர்.

சுடலையாண்டி – ஜி.பி. முத்து தரப்பினர் கடும் வாக்குவாதம்

இந்த நிலையில், மறுநாள் சுடலையாண்டி அந்தப் பகுதி வழியாக சென்றபோது, இவர் வருவதை அறிந்த ஜி.பி. முத்து, அவரது மனைவி அஜிதா, சகோதரர் மனைவி அனிதா, தந்தை கணேசன் ஆகியோர் சுடலையாண்டியை வழிமறித்து முள் செடிகளை அகற்றியது தொடர்பாக கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இதில், நடந்த சம்பவத்தை சுடலையாண்டி கூறியுள்ளார். ஆனால், அதனை ஏற்க மறுத்த ஜி. பி. முத்து குடும்பத்தினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் கடுமையாக நடைபெற்றது.

மேலும் படிக்க: தூத்துக்குடியில் சுட்டு பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி.. போலீசாரை நாட்டு துப்பாக்கியால் சுட்டதால் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கோஷ்டி மோதலில் ஒருவரையொருவர் தாக்குதல்

அப்போது, சுடலையாண்டிக்கு ஆதரவாக அந்தப் பகுதியை சேர்ந்த சுந்தரவேல், உறவினர் சரஸ்வதி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கியதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அடிதடியில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் விலக்கி விட்டு சமரசம் செய்தனர். பின்னர், இரு தரப்பினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஜி.பி. முத்து குடும்பத்தினர் உள்பட 11 பேர் மீது வழக்கு

அதன்படி, இரு தரப்பைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜி. பி. முத்து உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முள் செடிகளை அகற்றிய சம்பவத்தில் இருதரப்பை சேர்ந்தவர்கள் அடிதடியில் ஈடுபட்ட சம்பவமும், பிரபல யூடியூபர் ஜி. பி. முத்து உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த சம்பவமும் உடன்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை அப்டேட் இதோ..

Follow Us