AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெகவுக்கு 36 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு?.. மீண்டும் கட்சியில் பிளவு? இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி!!

தேர்தலுக்கு முன்புதான் தவெக உடன் கூட்டணி அமைக்கவில்லை, தேர்தலில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரசுக்கு முன்னதாகவே விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருடன் அதிமுகவும் சேர்ந்து புதிய கூட்டணியை ஏற்படுத்தி இருக்கலாம். கட்சி பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி அதனை செய்ய தவறிவிட்டார் என்று கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தவெகவுக்கு 36 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு?.. மீண்டும் கட்சியில் பிளவு? இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி!!
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 May 2026 07:44 AM IST

தவெகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து அதிமுகவின் 36 எம்எல்ஏக்கள் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் 2வது நாளாக ஆலோசனை நடத்திய சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த தோல்வியானது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்று அக்கட்சிக்கு 11வது தோல்வியாக மாறி இருக்கிறது.இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக அதிமுகவில் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். இதையொட்டி, அக்கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சென்னையில் சி.வி.சண்முகம் வீட்டில் கடந்த 2 நாட்களாக தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : பணம் இல்லை என பேசாதீங்க.. திசைதிருப்பாதீங்க – முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கேள்விகளை அடுக்கிய முக ஸ்டாலின்!

பதவியில் இருந்து இபிஎஸ் நீக்கம்?

அந்தவகையில், நேற்று 2வது நாளாக நடந்த இந்த கூட்டத்தில் 36 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இதில் சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை தழுவியதால் அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு, புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுக்குழு கூட்டத்தை விரைவாக கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தவெகவுடன் கூட்டணி அமைக்க தவறியதாக குற்றச்சாட்டு:

தேர்தலுக்கு முன்புதான் தவெக உடன் கூட்டணி அமைக்கவில்லை, தேர்தலில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரசுக்கு முன்னதாகவே விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருடன் அதிமுகவும் சேர்ந்து புதிய கூட்டணியை ஏற்படுத்தி இருக்கலாம். கட்சி பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி அதனை செய்ய தவறிவிட்டார் என்று கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இனி வரும் காலங்களில் விஜய்யுடன் கூட்டணி அமைத்து செயல்படுவதற்கான சூழல் ஏற்பட்டால், அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினரின் எண்ணமாக இருந்து வருகிறது. இதனை நிறைவேற்றும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் எதிர்ப்பாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார்.

பொதுச்செயலாளர் எஸ்.பி.வேலுமணி?

அதிமுக புதிய பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி, அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சி.வி.சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் கோஷ்டி பூசல் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என ஏராளமானோர் அக்கட்சியில் இருந்து வெளியேறிய பின்பும் இந்த பிரச்னைக்கு முடிவில்லை. தொடர்ச்சியாக, தற்போது மீண்டும் தலைமைக்கு எதிராக உட்கட்சி பூசல் தலைதூக்குகிறது.

இதையும் படிக்க :  CM Vijay speech: நான் மன்னர் பரம்பரை அல்ல – அதிரடியாக பேசிய முதலமைச்சர் விஜய்!

இதற்கிடையே, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில் ஒரு சில மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow Us