பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்
Parasakthi Movie: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் பராசக்தி. இந்தப் படம் ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் அப்டேட் வெளியிட்டுள்ளார்.

பராசக்தி
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 25-வது படமாக உருவாகி வருகின்றது பராசக்தி (Parasakthi Movie). இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிகர் ரவி மோகன் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் வெளியீடு குறித்த அப்டேட் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி படம் வருகின்ற 12-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் படத்தை எழுதி இயக்கி வரும் நிலையில் பீரியட் ட்ராமா படமாக உருவாகி வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பு கொள்கையை கடைப்பிடிப்பவராக நடித்துள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் வெளியாகும் பராசக்தி படத்தின் முதல் பாடல்:
இந்த நிலையில் பராசக்தி படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி படத்தின் முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… AK 64 படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!
ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#GV100 #Parasakthi first single this week 😍 … first single singers 😍😍😍 . Will reveal soon ❤️ …. Exciting days ahead ❤️ #SooraraiPottru #amaran #aakasamneehaddura
— G.V.Prakash Kumar (@gvprakash) November 2, 2025
Also Read… சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் உருவாகும் புது படம் அனந்தா – வெளியானது அப்டேட்!