Mari Selvaraj: எனது படங்களை எடுப்பதற்கு முன் கமல்ஹாசனின் அந்த படத்தை கண்டிப்பாக பார்ப்பேன்- மாரிசெல்வராஜ் சொன்ன விஷயம்!
Mari Selvaraj Inspiration: தமிழ் சினிமாவில் குறைந்த படங்களை இயக்கியிருந்தாலும், ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்துவரும் இயக்குநர்தான் மாரி செல்வராஜ். இவர் முன்னதாக பேசியிருந்த நேர்காணல் ஒன்றில், தான் படம் எடுப்பதற்கு முன் கமல்ஹாசனின் அந்த படத்தைப் பார்ப்பேன் என தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

கமல்ஹாசன் மற்றும் மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி பெருமைப் பெற்றவர். அந்த வகையில் இவரின் படங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவரின் இயக்கத்தில் தமிழில் இதுவரை கிட்டத்தட்ட 5 படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான படம்தான் பைசன் (Bison). நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram) கதாநாயகனாக நடித்திருந்த இப்படமானது, கடந்த 2025ம் அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகியிருந்தது என்றே கூறலாம். இவருக்கு தமிழ் சினிமாவில் முதல் திரைப்படமாக அமைந்திருந்தது பரியேறும் பெருமாள் (Pariyerum Perumal). கடந்த 2018ம் ஆண்டில் இப்படமானது வெளியாகியிருந்தது. இதில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி இணைந்து நடித்திருந்தனர்.
இப்படம் வெளியாகி மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த மாரிசெல்வராஜ், அதில் தனது படங்களை இயக்கும் முன், கமல்ஹாசனின் (Kamal Haasan) தேவர்மகன் (Thevar Magan) படத்தை பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விறுவிறுப்பாக நடைபெறும் லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் படப்பிடிப்பு – அப்டேட் இதோ
பைசன் திரைப்படம் குறித்து மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
A heartfelt success!! ❤️✨🌸#BisonKaalamaadan 🦬 Running Successfully in Theatres Near You!! pic.twitter.com/2EaczGaECo
— Mari Selvaraj (@mari_selvaraj) October 21, 2025
கமல்ஹாசனின் படம் குறித்து பேசிய மாரி செல்வராஜ்:
அந்த நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ், “கமல்ஹாசனின் தேவர் மகன் படத்தில் முழுவதும் ரத்தமும் சதையுமாகத்தான் இருந்தது. ஆனால் இந்த கதைக்குள் பெரிய தேவர் மற்றும் சின்ன தேவர் என இரு கதாபாத்திரம் இருந்தது. இந்த கதைக்குள் எனது அப்பா இருந்தால் எப்படி இருப்பாரு, அந்த மாதிரி முடிவு பண்ணி எனது அப்பாவிற்காக நானா எடுத்த படம்தான் மாமன்னன். கமல் சாராள் இவ்வாறு ஒரு படம் பண்ணமுடிகிறது, அவரும் தனது கதையை மிகவும் வித்தியாசமாக காட்டியிருக்கிறார்.
இதையும் படிங்க: அந்த விஷயத்தில் எனது பெற்றோரை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் – மனம் திறந்த தேவயானி!
இத்தனை காலம் தாண்டியும் கமல்ஹாசனின் தேவர்மகன் படமானது மாஸ்டர் ஆப் ஸ்கிரீன்ப்லேயாக இருந்துவருகிறது. நான் எனது பரியேறும் பெருமாள் படம் பண்ணும்போதும், தேவர்மகன் படம் பார்த்தபிறகுதான் பண்ணினே, கர்ணன் பண்ணும்போதும் அப்படித்தான், மேலும் மாமன்னன் படம் பண்ணும்போதும் தேவர்மகன் படத்தை பார்த்தபிறகுதான் இயக்கினேன். மேலும் மாமன்னன் படத்தில் இசக்கி வேடத்தில் வடிவேலு சார் நடித்திருந்தார். அவர்தான் மாமன்னன் இந்த படத்தில், மேலும் தேவர்மகன் படம் எனக்கு ஒரு மனப்புயலை உருவாக்கிய படம்” என அதில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.