Dhruv Vikram : மணிரத்னத்தின் இயக்கத்தில் புதிய படத்தில் இணைகிறாரா துருவ் விக்ரம்? வைரலாகும் தகவல்!

Mani Ratnam And Dhruv Vikram New Movie : இந்திய அளவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் மணிரத்னம். இவரின் இயக்கத்தில் தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இவரின் இயக்கத்தில் இறுதியாக தக் லைஃப் படம் வெளியானது. இப்படத்தை அடுத்து தற்போது நடிகர் துருவ் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Dhruv Vikram : மணிரத்னத்தின் இயக்கத்தில் புதிய படத்தில் இணைகிறாரா துருவ் விக்ரம்? வைரலாகும் தகவல்!

மணிரத்னம் மற்றும் துருவ் விக்ரம்

Published: 

05 Aug 2025 16:18 PM

தென்னிந்திய சினிமாவில்  முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம் (Mani Ratnam). இவரின் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) முதல் சூர்யா (Suriya) வரை பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). கடந்த 2025, ஜூலை 5 ஆம் தேதி இந்த படமானது உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் கதையைக் கமல்ஹாசன் எழுதியிருந்த நிலையில், மணி ரத்னம் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan) , கமல்ஹாசன், அபிராமி என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் இவருக்குக் கலவையான விமர்சனங்களையே கொடுத்திருந்தது.

இந்நிலையில், தற்போது மணிரத்னத்தின் புதிய படம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் மணிரத்னம், இளம் நடிகர் துருவ் விக்ரமை (Dhruv Vikram) கதாநாயகனாக வைத்து, அதிரடி ஆக்ஷ்ன் படத்தை இயக்கவுள்ளாராம்.

இந்த படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை ருக்மினி வசந்த் (Rukmini Vasanth) நடிக்கவுள்ளதாகவும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்த தகவல்களானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விவாகரத்து உண்மைதானா? கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கிய ஹன்சிகா மோத்வானி

துருவ் விக்ரம் கூட்டணியில் மணிரத்னத்தின் புதிய திரைப்படம் :

தக் லைஃப் படத்தை அடுத்து இயக்குநர் மணிரத்னம், நடிகர் துருவ் விக்ரமுடன் புதிய படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தில் நடிகர் துருவ் விக்ரம் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் ரொமாண்டிக் காதல் திரைப்படமாக உருவாக்கவுள்ளதாம். இந்த படத்தில் துருவ் விக்கிரமிற்கு ஜோடியாக நடிகை ருக்மினி வசந்த் நடிக்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே ஏஸ் மற்றும் மதராஸி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் விக்ரமின் 64வது படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : அமைதியான புரட்சி… காலம் உங்கள் பெயரை ஒளிரச் செய்யும் – சூர்யாவுக்கு கமல்ஹாசன் பாராட்டு!

நடிகர் துருவ் விக்ரமின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

இதனயைடுத்து ருக்மினி வசந்த் ஒரே நேரத்தில் அப்பா மற்றும் மகனுடன் இணைந்து நடிக்க உள்ளாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மணிரத்னத்தின் இந்த புதிய படத்தில் வழக்கம்போல இசையமைபாளார் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய படத்தின் ஷூட்டிங் வரும் 2025, நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த புதிய படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.