Parasakthi : சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’… – பொள்ளாச்சி ஷூட்டிங் ஓவர்.. படக்குழு வெளியிட்ட பதிவு இதோ!
Parasakthi Movie Shooting Update : நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாக பராசக்தி திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் பொள்ளாச்சி படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் சுதா கொங்கரா (Sudha Kongara). கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இயக்குநர் மணிரத்னத்தின் (Mani Ratnam) உதவி இயக்குநராகவும் முன்பு படங்களில் பணியாற்றியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் நடிகர் சூர்யா சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மீண்டும் சூர்யாவுடன் (Suriya) புறநானூறு என்ற படத்தில், சுதா கொங்கரா இணைவதாக இருந்தது, ஆனால் அந்த படத்திலிருந்து சூர்யா விலகினார். பின் அந்த கதையில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ஒப்பந்தமானார். அந்த படம்தான் தற்போது, “பராசக்தி” (Parasakthi) என்று பெயரிடப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி கதநாயகனாக நடிக்க, இப்படத்தில் வில்லனாக ரவி மோகன் (Ravi Mohan) நடித்து வருகிறார்.
மேலும் டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீப காலமாகப் பொள்ளாச்சி பகுதிகளில் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்பகுதியில் நடைபெற்ற ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்ததாக, படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் புகைப்படத்தை பகிர்ந்து, படக்குழு வெளியிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க ; தளபதி விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – சிவகார்த்திகேயன்!
பராசக்தி படக்குழு வெளியிட்ட பொள்ளாச்சி ஷூட்டிங் புகைப்படம்
Wrapped up the Pollachi schedule for #Parasakthi
Final Leg Awaits🔥🧨@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @dop007 @editorsuriya @supremesundar #KarthikRajkumar @devramnath @rhea_kongara… pic.twitter.com/rzNDo18tnU
— DawnPictures (@DawnPicturesOff) August 4, 2025
பராசக்தி திரைப்படத்தில் கேமியோ ரோல் :
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முன்னணி வேடத்தில் நடிக்க அவருடன் நடிகர்கள் ரவி மோகன், அதர்வா மற்றும் நடிகை ஸ்ரீலீலா என இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் கேமியோ ரோலில் தெலுங்கு நடிகர் ராணா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் பராசக்தி பட ஷூட்டிங்கில் இவர் இருந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, இந்த படத்தின் படப்பிடிப்பும் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் ஷட்டிங் மதுரை, இலங்கை மற்றும் தற்போது பொள்ளாச்சி என பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பொள்ளாச்சி பகுதி ஷூட்டிங் நிறைவடைந்ததாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : எந்த அடிப்படையில் தேசிய விருது கொடுக்கப்படுகிறது?- நடிகை ஊர்வசி கண்டனம்!
பராசக்தி படத்தின் ரிலீஸ் எப்போது?
இந்த படமானது 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் முன்னதாக நேர்காணல் ஒன்றில், பராசக்தி படைத்ததை வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிருட்டு வெளியிடத் திட்டமிட்டு வருவதாகக் கூறியிருந்தார். விரைவில் இப்படத்தின் ரிலிஸ் தேதி பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.