Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அனுஷ்கா – விக்ரம் பிரபுவின் காட்டி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் இதோ!

Ghaati Movie Trailer: நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் காட்டி. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அனுஷ்கா – விக்ரம் பிரபுவின் காட்டி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் இதோ!
காட்டி படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Aug 2025 19:23 PM

நடிகர்கள் விக்ரம் பிரபு (Vikram Prabhu) மற்றும் அனுஷ்கா ஷெட்டி (Anushka Shetty) முன்னணி வேடங்களில் நடித்துள்ள படம் காட்டி. தெலுங்கு மொழியில் ஆக்‌ஷன் க்ரைம் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தப் காட்டி படத்தை இயக்குநர் க்ரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளார். மேலும் சிந்தகிண்டி ஸ்ரீனிவாஸ் ராவ் என்பவர் இந்தப் படத்திற்கு திரைக்கதையை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் அனுஷ்கா ஷெட்டி உடன் இணைந்து நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன், சைதன்யா ராவ் மடடி, ஜெகபதி பாபு, ராகவ் ருத்ரா முல்புரு, ஜான் விஜய், ரவீந்திர விஜய், தேவிகா பிரியதர்ஷினி, லாரிசா போனேசி, VTV கணேஷ், ஜவாலா கோடி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட்ஸின் கீழ் தயாரிப்பாளர் எடுகுரு ராஜீவ் ரெட்டி மற்றும் சாய்பாபு ஜகர்லமுடி ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் முன்னதாக படம் இரண்டு முறை வெளியீட்டு தேதியை அறிவித்து பின்பு ஒத்தி வைத்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு வைத்து காத்திருந்த ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த காட்டி படக்குழு:

இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்து ரசிகரக்ளை சற்று கூல் செய்துள்ளது படக்குழு. அதன்படி நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள காட்டி படத்தின் ட்ரெய்லர் வருகின்ற 6-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பைப் பார்த்த ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி & விக்ரம் படங்கள் பிடிக்கும் – நடிகர் நாகர்ஜுனா

காட்டி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… எனது படங்களில் அந்தப் படத்தை 2-வது பாகம் எடுத்தால் மகிழ்ச்சி – நடிகர் சிவகார்த்திகேயன்