சீரியல் கில்லர் படத்தினை தயாரித்து நடிக்க இதுதான் காரணம் – மம்முட்டி சொன்ன விசயம்!

Mammotty Talks About Serial Killer Movie Kalamkaval: மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் ஒரு சீரியல் கில்லர் கதையை தயாரித்து அதில் அவரே நடித்தது குறித்து பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

சீரியல் கில்லர் படத்தினை தயாரித்து நடிக்க இதுதான் காரணம் - மம்முட்டி சொன்ன விசயம்!

கலம்காவல்

Published: 

09 Apr 2026 21:00 PM

 IST

பொதுவாக இந்திய சினிமாவைப் பொருத்தவரை நாயகன்கள் எப்போது நாயகன்களாகவே நடித்து வருவார்கள், வில்லன்கள் எப்போதும் வில்லன்களாகவே நடித்து வருவார்கள். இப்படி ஒவ்வொரு துறையில் இருப்பவர்களும் அவர்களின் துறைகளை அப்படியே கடைபிடித்து வருவார்கள். ஆனால் மலையாள சினிமாவைப் பொருத்தவரை இந்த ஸ்டீரியோடைப் கிடையாது. அதன்படி நாயகானகா உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் காமெடி நடிகர் நாயகனாக நடிக்கும் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் எந்த ஈகோவும் இல்லாமல் நடிப்பார். அதைப் போலவே நாயகனாக பல வெற்றிகளை கொடுத்து உச்சத்தில் இருக்கும் போதே நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு எந்த தயக்குமும் காட்டவும் மாட்டார்கள். இதன் காரணமாகவே மலையாள சினிமா இந்திய சினிமாவில் உள்ள மற்ற மொழி சினிமாக்களிடம் இருந்து சற்று வேறுபட்டு காணப்படுகின்றது.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் மம்முட்டி சீரியல் கில்லராக நடித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மலையாள சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இவர் கலம்காவல் படத்தில் நடித்தது மிகவும் துணிச்சலான காரியமாக பார்க்கப்பட்டது. மேலும் அந்தப் படத்தில் நடித்தது மட்டும் இன்றி அவர் அந்த படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படி செய்ததற்கான காரணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சீரியல் கில்லர் படத்தினை தயாரித்து நடிக்க இதுதான் காரணம்:

அதன்படி மம்முட்டி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியபொது அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அது என்ன என்றால் ஒரு சீரியல் கில்லர் கதையை நீங்களே தயாரித்து நடிக்க என்ன காரணம் என்று. அதற்கு பதிலளித்து பேசிய நடிகர் மம்முட்டி வேறு எந்தத் தயாரிப்பாளரும் என்னை இத்தகையதொரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதனால்தான் நானே அப்படத்தைத் தயாரித்துக்கொண்டு நடித்தேன். ஒரே கதாபாத்திரத்தில் 100 முறை நடிக்கும்போது, ​​ஒவ்வொரு முறையும் அந்த நடிப்பு ஒரே மாதிரியாக இருக்கக்கூடாது. அது மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்றும் நடிகர் மம்முட்டி தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்… பிரச்சனையை முடிக்க முன்வந்த சிலம்பரசன்

இணையத்தில் வைரலாகும் மம்முட்டியின் பேச்சு:

Also Read… SJ Suryah: அந்த ரெண்டு காட்சிகள் LIK படத்தோட ஹைலைட்டாக இருக்கும் – எஸ்.ஜே.சூர்யா பேச்சு!

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?