Mamitha Baiju : ஜன நாயகனில் எனது முதல் காட்சியே விஜய் சாருடன்தான் – மமிதா பைஜூ பேச்சு!

Mamitha Baiju About Thalapathy Vijay : தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் மமிதா பைஜூ. இவரின் நடிப்பில் பல்வேறு மொழிகளில் படங்கள் உருவாகி வருகிறது. விஜய்யின் ஜன நாயகன் படத்தில் இவர் நடித்திருக்கும் நிலையில், அப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங் குறித்து மமிதா பைஜூ பேசியுள்ளார்.

Mamitha Baiju : ஜன நாயகனில் எனது முதல் காட்சியே விஜய் சாருடன்தான் - மமிதா பைஜூ பேச்சு!

மமிதா பைஜு மற்றும் விஜய்

Published: 

30 Aug 2025 15:33 PM

நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya) வரை பல்வேறு பிரபலங்களின் திரைப்படங்களிலும் இணைந்து நடித்து வருகிறார். இவர் கடந்த 2024ம் ஆண்டு வெளியான பிரேமலு என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார். பிரபல மலையாள நடிகையான இவர், தற்போது தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தளபதி விஜய்யின் ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜனவரரி 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மமிதா பைஜூ, “தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் முதல் காட்சியே அவருடன் நடனமாடும் காட்சிதான்” என அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : இனிமேல் அப்படி நடிக்கமாட்டேன்.. நடிகர் விஷால் சொன்ன விஷயம்!

ஜன நாயகன் பட ஷூட்டிங் அனுபவம் குறித்து மமிதா பைஜூ பகிர்ந்த தகவல் :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட மமிதா பைஜூ, பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து ஜன நாயகன் படம் பற்றி பேச ஆரம்பித்த அவர், விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றி தெரிவித்துள்ளார். அவர் அதில், ” விஜய் சார் எவ்வளவும் அருமையாக நடனமாடுவார் என்பது அனைவருக்கும் தெரியும் இல்லையா?, நான் அவரின் நடனத்தை பார்த்து வளர்ந்தவள். ஜன நாயகன் படத்தில் எனது முதல் காட்சி விஜய் சாருடன்தான் இருந்தது. அந்த காட்சி ஒரு நடன காட்சிதான்” என அவர் கூறியுள்ளார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : உங்களுக்கு நான் ஈ படம் பிடிக்குமா? அப்போ இந்த லவ்லி படத்தை மிஸ் செய்யாதீர்கள்

மமிதா பைஜூ வெளியிட்ட ஜன நாயகன் படம் குறித்த பதிவு :

ஜனநாயகன் பட முதல் பாடல்

தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் நடிகை மமிதா பைஜூ மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் மீது அதீத எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இந்த பாடலில் தளபதி விஜய்யுடன் மமிதா பைஜூ மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடனமாடியிருப்பது உறுதியாகியுள்ளது. இந்த முதல் பாடல் வரும் 2025 ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.