தனுஷிடம் இருந்து நடிப்பு பற்றி நிறைய கற்றுக்கொண்டேன் – மமிதா பைஜூ
Mamitha Baiju Talks About Dhanush: மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமிதா பைஜூ. இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் விழா ஒன்றில் நடிகர் தனுஷ் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

மமிதா பைஜூ மற்றும் தனுஷ்
மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை மமிதா பைஜூ. மலையாள சினிமாவில் வெளியான பிரேமலு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பிரபலமான நடிகை மமிதா பைஜூ தற்போது அடுத்தடுத்து பலப் படங்களில் நடித்து வருகிறார். மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் பிசியான நடிகையாம வலம் வரும் இவர் கடந்த 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான டியூட் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜுவின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை மமிதா பைஜூ தமிழ் சினிமாவில் நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஷ்ணு விஷால் மற்றும் விஜய் படங்களிலும் கமிட்டாகி நடித்து உள்ளார்.
அதன்படி தமிழ் சினிமாவில் மட்டும் நடிகை மமிதா பைஜுவின் நடிப்பில் சூர்யா 46, கர, இரண்டு வானம் மற்றும் ஜன நாயகன் ஆகியப் படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இளம் வயதிலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப் போட்டு நடிக்கும் வாய்ப்பு மமிதா பைஜுவிற்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மமிதா பைஜூவிடம் தமிழ் சினிமாவில் நடிகர்களுடன் இணைந்து நடித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் அவர் தான் நடித்தப் படங்களின் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
தனுஷிடம் இருந்து நடிப்பு பற்றி நிறைய கற்றுக்கொண்டேன்:
அதில் மமிதா பைஜூ கூறியதாவது, வழக்கமாக ஷாட் எடுக்கும்போது நான் என் மனதை விட்டு நீங்க மாட்டேன், யாராக இருந்தாலும் என் வசனங்களை நினைவில் வைத்துக் கொண்டு படப்பிடிப்பில் இருப்பேன். ஆனால் முதல் முறையாக, கர படத்தில் ஒரு காட்சியில், தனுஷ் சாரின் நடிப்பைப் பார்க்கும்போது, என் வசனங்களை நான் முற்றிலுமாக மறந்துவிட்டேன். நடிப்பு பற்றி நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… தமிழ் நாட்டில் தாய் கிழவி படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!
இணையத்தில் வைரலாகும் மமிதா பைஜூவின் பேச்சு:
#MamithaBaiju about #Dhanush
– Usually, during a shot, I stay focused—I remember my dialogues and remain fully present on set.
– But for the first time ever, while shooting a scene in Kara, watching Dhanush sir perform, I completely forgot my dialogues.
– I learned so much… pic.twitter.com/eVKjBEJAaO
— Movie Tamil (@_MovieTamil) February 17, 2026
Also Read… அனிருத் இசையில் தி பாரடைஸ் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் குறித்து வெளியானது அப்டேட்