Aishwarya Lekshmi: விஜய் சார் ஜெயிக்கணும்னு ரொம்ப ஆசை.. எனக்கு இங்க ஓட்டு இல்லனு ரொம்ப வருத்தம் – ஐஸ்வர்யா லக்ஷ்மி

Aishwarya Lekshmi About Thalapathy Vijay: தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. சமீபத்தில் நெல்லையில் கடை திறப்புவிழா ஒன்றில் கலந்துகொண்ட இவர், அதில் தளபதி விஜய்யின் அரசியல் மற்றும் அவர் ஆட்சிமைக்கவேண்டும் என ஆசைப்படுவதாக பேசியுள்ளார்.

Aishwarya Lekshmi: விஜய் சார் ஜெயிக்கணும்னு ரொம்ப ஆசை.. எனக்கு இங்க ஓட்டு இல்லனு ரொம்ப வருத்தம் - ஐஸ்வர்யா லக்ஷ்மி

தளபதி விஜய் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி

Updated On: 

02 May 2026 15:46 PM

 IST

மலையாள சினிமாவின் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி (Aishwarya Lekshmi) . இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்துவருகிறார். இவர் தமிழில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான ஆக்ஷன் (Action) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இவர் தமிழில் தனது முதல் படத்திலே விஷாலுக்கு (Vishal) ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற படங்களிலும் நடித்துவந்தார். மேலும் மணிரத்னத்தின் (Mani Ratnam) இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 1 & 2 மற்றும் தக் லைஃப் (Thug Life) போன்ற படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்துவந்தார். முன்னதாக சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்த இவர், தற்போது எந்தவித சமூக ஊடக பக்கத்திலும் இல்லை.

அந்த வகையில் இன்று 2026 மே 2ம் தேதியில், நெல்லையில் தனியார் கடை திறப்புவிழா ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) அரசியல் மற்றும் அவர் ஆட்சியமைக்கவேண்டும் என தனது ஆசையை வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஒரு ஓஜி லோகேஷின் படமாக இருக்கும்.. அல்லு அர்ஜுனின் AA23 படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த ரத்னகுமார்!

தளபதி விஜய்யின் அரசியல் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி பதிவு:

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஐஸ்வர்யா லக்ஷ்மி பேசுகையில், “எனக்கு ரொம்பேவே சந்தோஷமாக இருக்கு விஜய் அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடன் எனக்கு நடிக்கணும் என ஆசை இருந்தது. இங்கு (தமிழகம்) தேர்தலில் எனக்கு ஓட்டு இல்லை. அதை நினைத்தால்தான் ரொம்பவே கஷ்டமாக இருந்தது. நானும், எனது நண்பர்கள் பலரும் விஜய் சாரின் ரசிகர்கள். அதனால் அவருக்காக ஓட்டுப்போட முடியவில்லையே என வருத்தம் இருந்தது. ஐயோ தமிழகத்தில் இருந்திருக்கலாமே, ஓட்டு கிடைத்திருக்குமே என கஷ்டமாக இருந்தது. அவர் ஜெயிக்கவேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் மற்றும் பிராத்தனை செய்கிறேன். அரசியல் குறித்து பேசவேண்டாம் என பலரும் சொல்வார்கள்.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை ரத்து செய்த அமேசான்… பேச்சுவார்த்தை நடத்தும் பிரபல நிறுவனம்

ஆனால் விஜய் சார் அரசியல் பேசும்போது பயங்கரமாக இருக்கும். அந்த மனிதனுக்கு இந்தத் தேவையில் இல்லை, அரசியல் வரவேண்டும் என்ற நிற்கதியும் இல்லை. அவருக்கு எப்போதுமே மக்களின் அன்பு, ஆதரவு இருக்கு. அவருக்கு சுமுகமான வாழ்க்கை இருக்கு. அதையெல்லாம் விட்டுவிட்டு மக்களின் நன்மைக்காக அரசியல் வருகிறார். வரவேண்டும் என எனக்கு ரொம்ப ஆசை இருக்கு, அதற்காக நான் பிராத்திக்கிறேன். மேலும் மக்களுக்கும் அதே ஆசை இருக்கிறது, அதையெல்லாம் நான் சொல்ல கூடாது மக்கள்தான்” சொல்லணும் என அதில் அவர் பேசியிருந்தார்.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..