அஜித் குமார் படத்தில் நடிக்கும் நடிகர் மோகன்லால்? வைரலாகும் செய்தி!

AK 64 Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் அஜித் குமார் 64. இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிப்பது மலையாள திரையுலகினர் இடையே உறுதியாகி உள்ளது.

அஜித் குமார் படத்தில் நடிக்கும் நடிகர் மோகன்லால்? வைரலாகும் செய்தி!

அஜித் குமார்

Published: 

18 Feb 2026 18:30 PM

 IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் அஜித் குமார் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் மட்டும் இன்றி தனது கார் ரேஸிங்கிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து பல நாடுகளில் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்று இந்திய நாட்டிற்கு பெறுமை சேர்த்து வருகிறார் நடிகர் அஜித் குமார். தொடர்ந்து படங்களில் நடிப்பது மற்றும் கார் ரேஸிங் என இரண்டிலும் பிசியாக இருக்கும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் இரண்டு படங்கள் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் தனது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் தனது 64-வது படத்திற்காக கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடிகர்கள் யார் யார் எல்லாம் நடிக்க உள்ளனர் என்பது குறித்து தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அஜித் குமார் படத்தில் நடிக்கும் நடிகர் மோகன்லால்?

இந்த நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாக உள்ள 64-வது படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளதாக முன்பு சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த நிலையில் மலையாள சினிமா வட்டாரங்களில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீ லீலா நடிக்க உள்ள நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read… Pocket Novel Movie: விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்.. தொடங்கியது பாக்கெட் நாவல் பட ஷூட்டிங்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகை பிரதியுஷாவின் காதலருக்கு 2 ஆண்டுகள் சிறை…. 25 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு – என்ன நடந்தது?

லாக்கரில் 2.7 கிலோ தங்கம் திருட்டு.. ஆன்லைன் சூதாட்டத்திற்காக அடமானம் வைத்த வங்கி உதவி மேலாளர்
எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் பிராமி எழுத்துகள்.. வியக்கும் உலக நாடுகள்..
பாக்கெட் பால் குடிக்கிறீர்களா?.. நீங்கள் குடிக்கும் பால் பாதுகாப்பானதுதானா?..
மிதிலாவின் 700 ஆண்டுகால ‘பஞ்சி’ திருமண மரபு: மங்கும் பாரம்பரியம், நிலைக்கும் அறிவியல்