அஜித்துடன் கூட்டணி… லோகேஷ் கனகராஜ் சொன்ன விசயம் – வைரலாகும் வீடியோ

Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரை இயக்குவது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அஜித்துடன் கூட்டணி... லோகேஷ் கனகராஜ் சொன்ன விசயம் - வைரலாகும் வீடியோ

லோகேஷ் கனகராஜ், அஜித் குமார்

Published: 

06 Nov 2025 14:05 PM

 IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்  இயக்கி இருந்த நிலையில் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் மீண்டும் அவரது 64-வது படத்திற்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி வைத்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. மேலும் சமீபத்தில் நடிகர் அஜித் குமார் அளித்தப் பேட்டியில் அவரது 64-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் வெளியாகும் என்று தெரிவித்தார்.

மேலும் அந்தப் படத்தின் அறிமுக வீடியோவைப் படக்குழு ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் நடிகர் அஜித் குமார் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்த தகவல்கள் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் குறித்து ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் அஜித் குமார் படத்தை இயக்குவது குறித்து பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அஜித் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி எப்போது?

இந்த நிலையில் இயக்குநராக தமிழ் சினிமாவில் வலம் வந்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார். அதன்படி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் படத்தின் பெயர் டிசி. இந்தப் படத்தின் டைட்டில் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது, இந்த கூட்டணி நடந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். இதுவரை அஜித் நடிக்காத அளவிற்கு ஒரு ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… 15 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷின் உத்தமபுத்திரன் – கொண்டாடும் ரசிகர்கள்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிப்பிற்கு ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை ரோஜா… வாழ்த்தும் பிரபலங்கள்