Coolie : ‘கூலி’ படத்தின் கதை இதுவா? இணையத்தில் கசிந்த தகவல்!
Rajinikanths Coolie Movie Plot Leaked : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்ட கதைக்களம் கொண்ட படமாக உருவாகியிருப்பது கூலி திரைப்படம். நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படமானது, வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதைக்களம் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இது குறித்துப் பார்க்கலாம்.

ரஜினிகாந்த்தின் கூலி
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Super Star Rajinikanth) முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி (Coolie). இந்த படத்தில் அவருடன் நடிகர்கள் உபேந்திர ராவ், நாகார்ஜுனா (Nagarjuna), அமீர்கான் (Aamir Khan) , ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan), சத்யராஜ் மற்றும் சவுபின் ஷாஹிர் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் வெளியாகக் காத்திருக்கிறது. இந்த படத்தைத் தமிழ் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இறுதியாக விஜய்யின், லியோ (leo) படம் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில், ரஜினிகாந்துடன் இந்த படத்தில் இணைந்தார். நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படமான கூலி படத்தை, சன் பிக்சர்ஸ் (Sun Pictures) நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் ட்ரெண்டாகிவருகிறது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் கதைக்களம் கசிந்துள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது, அது குறித்துப் பார்க்கலாம்.
இதையும் படிங்க : ரிலீசுக்கு தயாரான ‘மாரீசன்’.. வெளியான சென்சார் சான்றிதழ்!
கூலி திரைப்படத்தின் கதைக்களம் கசிவு :
நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் கதைக்களம், லெட்டர்பாக்ஸ்டி என்ற இணையதளத்தில் கசிந்துள்ளது. ரஜினிகாந்த் இப்படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், பழங்கால தங்கக் கடிகாரங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது, அதைத் திருட பல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார். இந்த திருட்டு அவரது முன்னாள் குழுவினரையும், இணை ஊழியர்களையும் ஒரே இடத்தில் ஒன்றிணைக்கிறது.
இதையும் படிங்க : இயக்குநர் பிரேம் குமாருடன் இணையும் சீயான் விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இருப்பினும், தேவா (ரஜினிகாந்த்) ஒரு காலத்தில் வீழ்ந்த கடத்தல் சாம்ராஜ்யத்தை, மீண்டும் மீட்டெடுக்கும் அவரது திட்டம், கட்டுப்பாட்டை மீறி மிக பெரியதாக மாறத் தொடங்குகிறது. இந்த படத்தின் கதைக்களம் போலியான குற்றம், பேராசை போன்ற கதைக்களத்துடன் உருவாகியிருப்பதாக அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தகவல் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூலி திரைப்படத்தின் மோனிகா பாடல் BTS பதிவு :
Catch the BTS from the sets of sensational #Monica ❤️
Watch the second single #Monica from #Coolie starring @hegdepooja
Tamil ▶️ https://t.co/UHACTjGi6I
Telugu ▶️ https://t.co/fDFDsYuaxQ
Hindi ▶️ https://t.co/Ll2QSJWzOV#Coolie worldwide from August 14th @rajinikanth… pic.twitter.com/0NYWVOFx93
— Sun Pictures (@sunpictures) July 16, 2025
கூலி படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா :
ரஜினிகாந்த்தின் இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தை ட்ரெய்லர் வரும் 2025, ஆகஸ்ட் 2ம் தேதியில் வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் ரீலீஸையும், இசை வெளியீட்டை விழாவையும் படக்குழு ஒன்றாக நடத்தத் திட்டமிட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.