Dhanush: வரிசைக்கட்டும் படங்கள்.. பக்காவாக பிளான் போட்ட தனுஷ்!
Dhanush Upcoming Films List : தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் உருவராக இருந்து வருபவர் தனுஷ். இவர் படங்களை இயக்கியும் வருகிறார். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தொடர்ந்து தெலுங்கு, இந்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவரின் முன்னணி நடிப்பில் வரிசைகட்டி நிற்கும் புதிய திரைப்படங்களின் விவரம் குறித்து பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் பீக்கில் இருந்து வருபவர் தனுஷ் (Dhanush). இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், இயக்குனராக, பாடகராக, தயாரிப்பாளராக என பல்வேறு பணிகளை செய்துவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ராயன் (Raayan). இவரின் இயக்கத்தில் வெளியான இப்படமானது அமோக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். இவரின் நடிப்பில் தற்போது இறுதிக்கட்டத்தில் குபேரா மற்றும் இட்லி கடை (Kuberaa and Idly kadai) திரைப்படமானது இருந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த புதிய படங்களிலும் கமிட்டாகி வருகிறார். மேலும் கடந்த 2025, ஏப்ரல் 9ம் தேதி இரவில் எந்தவித எதிர்ப்பும் அறிவிப்பும் இல்லாமல் நடிகர் தனுஷின் டி56 படத்தின் அறிவிப்புகள் வெளியாகியது. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். இந்த இருவரின் கூட்டணி ஏற்கனவே கர்ணன் என்ற படத்தில் இணைந்துள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டு வெளியான இப்படமும் மக்களிடையியே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. தற்போது நடிகர் தனுஷின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. அந்த படங்களின் விவரங்கள் குறித்து முழுமையாக பார்க்கலாம்.
இட்லி கடை திரைப்படம் ;
இந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கி, அதில் முன்னணி கதநாயகனாக நடித்து வருகிறார். இவருடன் ராஜ் கிரண், நித்யா மேனன், அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே என பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். ஜி.வி. பிரகாஷின் இசையமைப்பில் உருவாகிவரும் இப்படமானது தற்போது இறுதிக்கட்டத்தில் இருந்து வருகிறது. மேலும் இஇப்படம் வரும் 2025, அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகவுள்ளது.
குபேரா திரைப்படம் :
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவகிவரும் திரைப்படம் குபேரா. இந்த படத்தில் தனுஷ் முன்னணி நாயகனாக நடிக்க அவருடன் நடிகை ராஷ்மிகா மந்தனா , நாகார்ஜுனா என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.
தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் :
தனுஷின் ராஞ்சனா திரைப்படத்தை இயக்கிய அதே இயக்குநர் ஆனந்த் எல்.ராய்தான் தற்போது தேரே இஷ்க் மெய்ன் படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுஷின் கதநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கிருதி சனோன் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது பனாரஸில் நடந்து வருகிறது. இப்படம் இந்த 2025, நவம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது.
டி55 திரைப்படம் :
அமரன் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் டி55. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. மேலும் 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது
டி56 திரைப்படம் :
நடிகர் தனுஷின் முன்னணி நடிப்பிலும், இயக்குநர் மாரி செல்வராஜின் கூட்டணியிலும் உருவாகவுள்ள படம் டி56. இந்த படத்தின்முலம் இவர்கள் இருவரின் கூட்டணி இரண்டாவது முறையாக இணைகிறது. இந்த படமானது வரலாற்று சார்ந்த கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படமும் 2026ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர்த் தொழில் பட இயக்குநருடன் புதிய படம் :
இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை டான் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்திருந்தார். இப்படத்தின் அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.