“தி ஃபால் ஆஃப் மதுரோ” எனத் தலைப்பிடப்பட்ட இந்த குறும்பட ஏஐ வீடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “காட்ஸ்பீடு” என்று கூறி, அந்த நடவடிக்கைக்கு அனுமதி வழங்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும் ஒரு ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ, வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரெஸும் அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய இராணுவ நடவடிக்கையில் பிடிபட்டதாக கற்பனை செய்து காட்டுகிறது.