ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு சாதாரண போன் பூத், இதுவரை ஆயிரக்கணக்கான மக்களுக்கு தங்கள் இழப்பையும், துயரத்தையும் கடந்து வர உதவியுள்ளது. இந்த தொலைபேசி எந்த நெட்வொர்க்குடனும் இணைக்கப்படவில்லை. அது ஒலிக்கவும் செய்யாது. மறுபுறம் யாரும் பேச மாட்டார்கள். ஆனால் அதில் பேசிவிட்டு வெளியே வரும் பலர், மனம் லேசானதாக உணர்கிறார்கள்.