Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்.. ரஷ்யா கடும் எச்சரிக்கை.. என்ன நடக்கிறது?

US Attack on Iran: ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 25 சதவீத சுங்கவரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். இதற்கு ஈரான் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வராத நிலையில், சீனா இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து, பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்.. ரஷ்யா கடும் எச்சரிக்கை.. என்ன நடக்கிறது?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Jan 2026 15:44 PM IST

ஜனவரி 14, 2026: ஈரான் மீது புதிய இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ளும் அமெரிக்காவின் மிரட்டல்கள் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தெஹ்ரானின் உள்நாட்டு அரசியலில் “சதிகரமான வெளிநாட்டு தலையீடு” நடைபெறுவதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் சூழ்நிலைக்கும், உலகளாவிய பாதுகாப்புக்கும் இத்தகைய நடவடிக்கைகள் “பேரழிவு விளைவுகளை” ஏற்படுத்தும் என்பதை அமெரிக்கா உணர வேண்டும் என தெரிவித்துள்ளது.

“ஜூன் 2025ல் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மீண்டும் நடத்த, வெளிநாட்டு தூண்டுதலால் உருவாகும் கலவரங்களை காரணமாக்குபவர்கள், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை உணர வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட 2000 பேர் உயிரிழப்பு:

இதற்கு முன்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை தொடர்ந்து போராடுமாறு கேட்டுக்கொண்டு, “உதவி வரும் வழியில் உள்ளது” என கூறினார். ஆனால், அதன் விவரங்களை அவர் வெளியிடவில்லை. ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கிய நடவடிக்கைகளில் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க: பாலக் பன்னீரால் உண்டான பிரச்சனை.. 2 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய சம்பவம்.. நஷ்ட ஈடு வழங்கிய பல்கலைக்கழகம்..

மேலும், ஈரானை குறித்து அமெரிக்க இராணுவம் “மிக வலுவான விருப்பங்களை” பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் கூறியிருந்தது, ஈரான் தரப்பில் கடும் எதிர்வினையை ஏற்படுத்தியது.

தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் – ஈரான் அமைச்சர்:

இதற்கு பதிலளித்த ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் அசீஸ் நசீர்சாதே, “எங்களை தாக்கினால் அதற்கு வலுவான பதில் அளிப்போம். பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களும், வாஷிங்டனுக்கு உதவும் நாடுகளும் எங்களுக்கான சட்டப்பூர்வ இலக்குகளாக இருக்கும்” என தெரிவித்தார்.

மேலும் படிக்க: ஈரான் உடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி.. இந்தியா மீதான வரி 75% ஆக உயருகிறது?

இதனிடையே, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 25 சதவீத சுங்கவரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். இதற்கு ஈரான் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வராத நிலையில், சீனா இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து, பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியின் 77 சதவீதத்தை சீனா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் முழுவதும் 31 மாகாணங்களில் 600க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதில் 2,003 பேர் உயிரிழந்ததாகவும், 16,700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஈரானில் நிலவும் பொருளாதார வீழ்ச்சி:

தேசிய நாணயமான ரியால் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இறைச்சி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், நாட்டின் பணவீக்கம் சுமார் 40 சதவீதமாக உள்ளது.

இந்த போராட்டங்கள் கடந்த டிசம்பரில் தொடங்கி, பொருளாதார பிரச்சனைகளில் இருந்து அரசுக்கு எதிரான முழுமையான எதிர்ப்பாக மாறியுள்ளது. 2022ஆம் ஆண்டு காவல் துறையின் காவலில் மக்சா அமினி உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகே, இந்த எதிர்ப்பு தீவிரமடைந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என தெரிவித்தார்.